Sunday, March 17, 2024
மேலும்
    Homeஜோதிடம்வாரத்தின் துவக்கம் சவால்கள் நிறைந்ததாக காணப்படுகிறதா?...இந்த வார ராசிபலன்கள் உங்களுக்காக இதோ!

    வாரத்தின் துவக்கம் சவால்கள் நிறைந்ததாக காணப்படுகிறதா?…இந்த வார ராசிபலன்கள் உங்களுக்காக இதோ!

    மேஷம்:

    உங்கள் ஆற்றலை நீங்கள் உணரும் நேரம். இலக்குகளை நிர்ணயித்து முயன்றால் வெற்றி காண்பீர்கள். பணியிடத்தில் சவால்கள் நிறைந்து காணப்படும். சிறிது கவனமுடன் நம்பிக்கையாக உங்கள் பணிகளை மேற்கொள்ளுங்கள். தேவையான சமயத்தில் உங்களுக்கு பண உதவி கிடைக்கும். பங்கு வர்த்தகத்தின் மூலம் பணம் கிடைக்கும். உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்கு செல்வதன் மூலம் உறவில் நல்லிணக்கம் ஏற்படுத்தத இயலும். கண்களில் எரிச்சல் ஏற்படலாம். இதனால் சில பாதிப்புகள் உண்டாகலாம். முகத்தில் பருக்கள்; அல்லது கட்டிகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

    ரிஷபம்:

    வாரத்தின் துவக்கம் சவால்கள் நிறைந்ததாக காணப்படும். உங்களிடம் ஈகோ பிரச்சினை காணப்படும். இது உங்கள் மேன்மைக்கு உகந்ததல்ல.பணியிடத்தில் உங்கள் சகபணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். இதனால் உங்கள் மனதில் குழப்பங்கள் உண்டாகும். பணியில் தொய்வு ஏற்படும். அஜாக்கிரதை காரணமாக உங்கள் பணம் வீணாக செலவாகலாம். உங்கள் வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்திற்காக நீங்கள் செலவு செய்ய நேரலாம். குடும்ப அங்கத்தினர்களிடையே பிணைப்பை வலுப்படுத்த முயற்சி எடுப்பீர்கள். உங்கள் முயற்சியை மென்மையாகக் கையாளுங்கள். உங்கள் உணவுப் பழக்கத்தை கண்காணியுங்கள்.

    மிதுனம்:

    உங்கள் முன்னேற்றத்தில் கவனத்துடன் இருங்கள். மகிழ்ச்சியாக இருங்கள். உங்கள் முன்னேற்றப் பாதையில் தடைகள் காணப்படும். சிந்தித்து அறிவுப்பூர்வமாக செயல்படுவது நல்லது. நீங்கள் உறுதியுடனும் எளிதாகவும் பணியாற்றுவீர்கள். உங்கள் முயற்சியின் மூலம் நல்ல பலன்களைப் பெறலாம். நிதிநிலைமை சாதகமாக இருக்காது. நாளின் முடிவில் தேவையில்லாத செலவினங்கள் கூட ஏற்படலாம். உங்கள் மனதில் குழப்பங்கள் காணப்படும். அதனால் உங்கள் துணையுடன் சுமுகமான உறவை பராமரிக்க இயலாது. சூட்டின் காரணமாக முகத்தின் தோல்களில் சில பிரச்சினைகள் ஏற்படலாம்.

    கடகம்:

    நீங்கள் இன்னும் அதிக முயற்சி செய்ய வேண்டும். எந்த விஷயங்களுக்கு முதலிடம் தரவேண்டும் என்று உணர்ந்து அதற்கேற்றாற் போல நடந்து கொள்ள வேண்டும். அதிக பணிச்சுமைகளை சந்திக்க நேரும்.எதையும் இலேசாக எடுத்துக் கொள்ளுங்கள்.சிறந்த திட்டமிடல் வேண்டும்.நிதிவளர்ச்சி சிறப்பாக இருக்காது.பணப் பரிவர்த்தனையின் போது கவனமாக இருக்கவும்.தொடர்பாடல் பிரச்சினை காரணமாக குடும்பத்தில் நல்லிணக்கம் குறையும்.குடும்ப அங்கத்தினர்களுக்காக நேரம் ஒதுக்கி அவர்களிடம் கவனம் செலுத்துவது நல்லது. ஆரோக்கியம் சுமாராக இருக்கும். உங்கள் தோள்களில் காயங்கள் ஏற்படலாம்.

    சிம்மம்:

    நிறைய மாற்றங்கள் ஏற்படும். பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆன்மீக விஷயங்களில் உங்கள் மனம் லயிக்கும். நீங்கள் பணிகளை சாதாரணமாக மேற்கொண்டு நல்ல முறையில் முடித்துவிடுவீர்கள். பணவரவிற்கான அதிர்ஷ்டம் குறைந்து காணப்படுகின்றது. கூடுதல் செலவினங்களை சந்திக்க வேண்டியிருக்கும். உங்கள் காதல் காரணமாக உங்கள் தந்தையாருடன் கருத்து வேறுபாடு காணப்படும். உங்கள் தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. அவருடைய உடல் நலத்திற்காக பணத்தை செலவு செய்ய நேரலாம்.

    கன்னி:

    வாரத்துவக்கத்தில் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். அது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். பிரார்த்தனையில் ஈடுபடலாம். ஆன்மீக விஷயங்களில் ஈடுபடலாம். கவனக் குறைவின் காரணமாக சில சமயங்களில் நீங்கள் மேற்கொண்ட பணிகளில் உங்களுக்கு குழப்பங்கள் ஏற்படும். வரவும் செலவும் சேர்ந்தே காணப்படும். உங்கள் சேமிப்பிற்கு சில கட்டுப்பாடுகள் காணப்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். குடும்ப அங்கத்தினர்களிடம் நல்லுறவை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியம் மிதமாக காணப்படும். பதட்டம் காரணமாக தலைவலி ஏற்படலாம்.

    காதல் விவகாரங்களை…..இந்த வார ராசிபலன்கள் துலாம் முதல் விருச்சிகம் வரை !

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....