Monday, March 18, 2024
மேலும்
    Homeஜோதிடம்இதன் மூலம் தவறுகள் நேராமல் தடுக்கலாம்; துலாம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள் இதோ!

    இதன் மூலம் தவறுகள் நேராமல் தடுக்கலாம்; துலாம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள் இதோ!

    துலாம்:

    உங்கள் முயற்சிகளில் நல்ல பலன்கள் கிடைக்கும். நீங்கள் வெற்றி பெறுவதற்கான உறுதியுடன் காணப்படுவீர்கள். உங்களின் நம்பிக்கை உணர்வு உங்களை உச்சத்திற்கு அழைத்துச் செல்லும். பணியிடத்தில் முன்னேற்றம் காணப்படும். உங்கள் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகமாக காணப்படும். உங்களுக்கு ஊக்கத் தொகை போன்ற வகையில் விரைவாகப் பணம் கிடைக்கும். உங்கள் துணையிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். இதனால் இருவருக்கும் இடையே உறவுப் பிணைப்பு வலுப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தியானம் அல்லது யோகா மேற்கொள்வதன் மூலம் ஆரோக்கியத்தை தக்க வைக்கலாம்.

    விருச்சிகம்:

    உங்கள் வளர்ச்சியை பாதிக்கும் வகையில் உங்கள் தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். நம்பிக்கையுடன் செயல்பட்டால் உங்களின் இலட்சியத்தை அடையலாம். அதிகமான பணிகள் காரணமாக பணியில் தவறுகள் நேரலாம். சரியாக திட்டமிட்டால் இந்த சவால்களை சமாளிக்கலாம். பணப்புழக்கம் குறைந்து காணப்படும். பணத்தை கவனமாக கையாள வேண்டும். உங்கள் துணையுடன் அன்பான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். உங்கள் துணையின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருப்தியான மன நிலை காரணமாக நல்ல உடல் நிலை காணப்படும்.

    தனுசு:

    இந்த வாரம் எதிர்பாராத நிச்சயமற்ற பலன்கள் காணப்படும். நன்மை மற்றும் தீமை இரண்டும் கலந்த பலன்கள் காணப்படும். சவால்களை சந்திக்க பொறுமை தேவை. பணியிடச் சூழல் சிறந்த முறையில் செயலாற்றும் வகையில் இருக்கும். உங்கள் பணியில் திருப்தி அடைவீர்கள். நிதிநிலைமை இன்று சாதகமாக இருக்கும். உங்கள் சேமிப்பு ஆற்றல் அதிகரிக்கும். அது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். உங்கள் துணையுடன் அன்பையும் புரிந்துணர்வையும் பகிர்ந்து கொள்வீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அமைதியான குடும்பச் சூழல் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

    மகரம்:

    உங்கள் வளர்ச்சியில் சில தடைகள் காணப்படும். சிறப்பாக திட்டமிடுதல் மற்றும் யுக்திகளை கையாள்வதன் மூலம் வெற்றி பெறலாம். பணிகளை முன்கூட்டியே திட்டமிடுவதன் மூலம் தவறுகள் நேராமல் தடுக்கலாம். இதனால் உங்கள் பணியின் தரம் உயரும். நிதிநிலைமை சிறப்பாக இருக்காது. என்றாலும் பூர்வீகச் சொத்து மற்றும் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். உங்கள் துணையின் விருப்பபடி நடந்து கொள்வதன் மூலம் மகிழ்ச்சியை தக்க வைத்துக் கொள்ளலாம். ஆரோக்கியத்தில் பெரிய அளவிலான பிரச்சினைகள் ஏதும் இருக்காது. என்றாலும் அதிக வேலை காரணமாக தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.

    கும்பம்:

    இந்த வாரம் அனைத்து செயல்களும் எளிதாகவும் சுமுகமாகவும் நடைபெறும். உங்களின் உறுதியான மற்றும் நேர்மறை அணுகுமுறை காரணமாக வெற்றி காண்பீர்கள். உங்கள் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். பணியில் உங்கள் திறமை மற்றும் ஆற்றலை வெளிப்படுத்துவீர்கள். பணப்புழக்கம் அதிகமாக காணப்படும். உங்கள் சேமிப்பு ஆற்றல் அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. உங்கள் துணையுடன் நட்பாக பழக வேண்டும். இதனால் உங்கள் பிரியமனவரிடம் நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ள முடியும். உங்களிடம் காணப்படும் ஆற்றல் காரணமாக சிறந்த ஆரோக்கியம் காணப்படும்.

    மீனம்:

    மந்தமான நடவடிக்கைகள் காணப்படும். உணர்ச்சி வசப்படாமல் இருக்க உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். அமைதியாக இருக்க வேண்டும். உங்கள் செயல்களை திறம்பட ஆற்ற இயலாது. சக பணியாளர்கள் ஒத்துழைக்க மாட்டார்கள். பண வரவு திருப்திகரமாக இருக்காது. பணவரவு காணப்பட்டாலும் தேவையற்ற விஷயங்களுக்காக பண விரயம் ஏற்படுவதைக் காண்பீர்கள். உங்கள் துணையுடன் நட்பு முறையில் பழகுவீர்கள்.இந்த அணுகுமுறை காரணமாக இருவருக்கும் இடையே நல்ல புரிந்துணர்வும் மகிழ்ச்சியும் பராமரிக்க முடியும். அமைதியான மனநிலை காரணமாக இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

    இனி ஹோட்டல்களில் சர்வீஸ் சார்ஜ் கொடுக்காதீங்க… – தகவல்கள் உள்ளே!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....