Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமீண்டும் தீவிரப் பரவலில் கொரோனா வைரஸ்? என்ன சொல்கிறது அரசு?

    மீண்டும் தீவிரப் பரவலில் கொரோனா வைரஸ்? என்ன சொல்கிறது அரசு?

    இந்தியாவில் கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தைக் கட்ந்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசும், மாநில அரசுகளும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, விமான நிலையத்திற்கு செல்லும் போதும், விமானத்தில் பயணம் செய்யும் போதும் முகக்கவசம் அணியாமல் செல்ல தடை விதித்து உத்தரவிட்டுள்ளது டெல்லி உயர்நீதிமன்றம். இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலகையே புரட்டிப்போட்ட கொரோனாவின் தாக்கம் அண்மைக்காலமாக குறைந்திருந்தது. ஆனால், கொரோனா பரவலும், உயிர் இழப்புகளும் முற்றிலுமாக நின்று போய்விடவில்லை. சீனாவில் உருவான கொரோனா வைரஸ், இந்தியாவிற்குள் விமான நிலையங்கள் மூலமாகத் தான் பரவியது. கொரோனா பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து, இந்தியாவிற்கு பயணம் செய்ததே நோய் பரவலுக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது.

    நீதிபதி சி. ஹரி சங்கர் அவர்கள், கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு வழிமுறைகள் பற்றி, தானாகவே முன்வந்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இவர் கொல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் பயணம் செய்தார். அப்போது, விமானப் பயணிகள் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியினை பின்பற்றாமலும் மிகவும் அலட்சியமாக இருந்ததைப் பார்த்துள்ளார். இதனைப் பார்த்து, அதிர்ச்சியடைந்து தான் இந்த வழக்கை தொடுத்திருக்கிறார்.

    இந்த வழக்கானது, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் விபின் ஷங்கி மற்றும் சச்சின் டிட்டா ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கொரோனா விதிமுறைகளை மீறுபவர்கள் விமானத்தில் பயணம் செய்ய முடியாது என்றும், விமான நிலையத்தில் பணியாற்றி வரும் அனைத்து ஊழியர்களும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்றும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநகரத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மீண்டும் பொதுமக்களை கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வைப்பதில் சில சிக்கல்கள் இருந்தாலும், விமான நிலைய ஊழியர்கள் அனைவரும், இதனை மிகத் தீவிரமாக கையாண்டு உடனே நடைமுறைப்படுத்த வேண்டும். கொரோனா எனும் தொற்றுநோய் இன்னமும் குறையவில்லை. மக்கள் கவனக் குறைவாக இருக்கும் வரையில், கொரோனா தனது கோரமுகத்தினை காட்டிக் கொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

    கொரோனா காலத்தில் பின்பற்றப்பட்ட முககவசம் அணிதல், சேனிடைசர் கொண்டு கைகளை சுத்தப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற நடவடிக்கைகளை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    கிரிக்கெட்டில் பெண்களின் பங்களிப்பும் அவசியம் இருக்க வேண்டும் – தல தோனி நெகிழ்ச்சி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....