Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇனி ஹோட்டல்களில் சர்வீஸ் சார்ஜ் கொடுக்காதீங்க... - தகவல்கள் உள்ளே!

    இனி ஹோட்டல்களில் சர்வீஸ் சார்ஜ் கொடுக்காதீங்க… – தகவல்கள் உள்ளே!

    உணவகங்களில் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுவது பரவலான வழக்கமாக உள்ளது. ஆனால், சில உணவகங்கள் மிக அதிக சேவைக் கட்டணம் வசூலிப்பதாக அண்மையில் சமூக வலைதளங்களில் சிலர் புகார் எழுப்பினர். இதையடுத்து தேசிய உணவக சங்கத்திடம் மத்திய அரசு ஆலோசனை நடத்திவந்தது.

    அதனைத் தொடர்ந்து, ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் சர்வீஸ் சார்ஜ் பெறுவது சட்டவிரோதம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. சர்வீஸ் சார்ஜ் என்ற நடைமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்திய தேசிய ரெஸ்டாரன்ட் கூட்டமைப்புக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    ஹோட்டல் நிர்வாக சட்டத்தின்படி ஹோட்டல் அல்லது ரெஸ்டாரன்ட் நடத்துபவர்கள் வாடிக்கையாளர்களிடம் சர்வீஸ் சார்ஜ் வசூலிக்க எந்தவிதமான உரிமையும் இல்லை என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. வாடிக்கையாளரிடம் ஹோட்டல் நிர்வாகத்தினர் சர்வீஸ் சார்ஜ் வாங்குவது தவறு என்றும் ஒருவேளை சர்வீஸ் சார்ஜ் வாடிக்கையாளரின் விருப்பத்தின் பேரில் தருவதாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம் என்றும் ஆனால் வற்புறுத்தி வலுக்கட்டாயமாக வாங்கக் கூடாது என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

    இது தொடர்பாக இந்திய தேசிய ரெஸ்டாரன்ட் கூட்டமைப்புடன் நேற்று மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகத்தின் செயலாளர் ரோஹித் குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்கள் வாடிக்கையாளர்களிடம் கட்டாயமாக சர்வீஸ் சார்ஜ் வாங்குவதாக வரும் புகார்கள் குறித்தும், ஊடகத்தில் வரும் செய்திகள் குறி்த்தும் மத்திய அரசு சார்பில் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இதையடுத்து, மத்திய நுகர்வோர் துறை அமைச்சகம் சார்பில் பிறப்பித்த உத்தரவில், ” மத்திய நுகர்வோர் பாதுகாப்புச்சட்டத்தில் ரெஸ்டாரண்ட்கள், ஹோட்டல்கள் நுகர்வோர்களிடம் சர்வீஸ் சார்ஜ் வாங்குவது குறித்து ஏதும்கூறப்படாத நிலையில் அதை வசூலிப்பது சட்டவிரோதம், நியாயமற்ற போக்கு.

    இதை உடனடியாக ரெஸ்டாரன்ட்கள், ஹோட்டல்கள் நிறுத்த வேண்டும். சர்வீஸ் சார்ஜ் அல்லது டிப்ஸ் என்பது வாடிக்கையாளர்கள் தாமாக முன்வந்து விருப்பத்தின் அடிப்படையில் வழங்குவதாகும். இதை பில்கட்டணத்துடன் சேர்க்கக்கூடாது. அதுமட்டுமல்லாமல் நுகர்வோர்களிடம் வலுக்கட்டாயாக சர்வீஸ் சார்ஜை வசூலித்து அதை பில்கட்டணத்துடன் சேர்ப்பதும் கூடாது.” என உத்தரவிட்டுள்ளது.

    இந்த நிலையில் ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரெண்ட்களில் வாடிக்கையாளர்களிடம் இருந்து சர்வீஸ் சார்ஜ் வசூலிப்பதை முடிவுக்கு கொண்டுவர தனியாக சட்டம் இயற்றவும் மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்திய தேசிய ரெஸ்டாரன்ட் கூட்டமைப்பு தலைவர் கபீர் சூரி கூறுகையில் ” ஹோட்டல்கள் சர்வீஸ் சார்ஜ் வெளிப்படையாகவே வசூலிக்கிறது. இந்த கட்டணத்தை நீதிமன்றமே வரவேற்றுள்ளது. இந்த சர்வீஸ் சார்ஜிலிருந்துதான் மத்திய அரசுக்கும் வருமானம் கிடைக்கிறது” எனத் தெரிவித்தார்

    ஆனால், எந்த நீதிமன்றமும் சர்வீஸ் சார்ஜ் வசூலிப்பதை வரவேற்கவும் இல்லை, அவ்வாறு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று நுகர்வோர் அமைச்சக அதிதகாரிகள் தெரிவித்தனர்.

    ஜூன் 5: உலக சுற்றுச்சூழல் தினம்! படிப்போம், காப்பாற்றுவோம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....