Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்வரலாற்றில் நடந்த அழகான சம்பவம்; எஜமானரின் உயிரை இரண்டு முறை காத்த நாய்!!

    வரலாற்றில் நடந்த அழகான சம்பவம்; எஜமானரின் உயிரை இரண்டு முறை காத்த நாய்!!

    மனிதர்களுக்கு பல்வேறு விலங்குகளும் நண்பர்களாய் இருந்தாலும், நாய்களுக்கு எப்பொழுதும் ஒரு தனி இடமுண்டு. நூறு முறை கல்லெறிந்தாலும் கொஞ்சமும் கோபமின்றி மனிதர்களிடம் பழகும் தன்மை நாய்களிடம் மட்டுமே உள்ளது.

    மனிதர்களின் உற்ற தோழனாகவும், ஒரு நல்ல பாதுகாவலனாகவும், சிறந்த நினைவுகளை அளிப்பவனாகவும் நாய்கள் உள்ளன. பல வீடுகளில் நாய், குடும்ப உறுப்பினர்களில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. நாய்களின் தியாகத்தினை போற்றி பல திரைப்படங்களும், கதைகளும், கவிதைகளும் எழுதப்பட்டுள்ளன.

    நாய்கள் மனிதர்களை ஆபத்துகளில் இருந்து காப்பற்றிய தருணங்கள் பட்டியலிட முடியாத அளவிற்கு மிகவும் அதிகம் உள்ளன. அப்படி வரலாற்றில் ஒரு நினைவாய்ப் பதிந்து போன சம்பவத்தினை தான் நாம் இப்பொழுது பார்க்கப்போகிறோம்.

    ஜூலியானா..

    1941ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் மிகவும் உக்கிரமடைந்து கொண்டிருந்தது. ஏப்ரல் மாதத்தில் இங்கிலாந்து நாட்டின் மீது தீப்பற்றிக்கொள்ளும் விதமான வெடிகுண்டுகள் வீழ்ந்த வண்ணமிருந்தது.

    இந்த நிலையில், பிரிஸ்டோல் நகரில் இருந்த ஒரு வீட்டினுள் வெடிகுண்டு ஒன்று விழுந்துள்ளது. அந்த வீட்டில் தனது எஜமானருடன் ஜூலியானா என்னும் கிரேட் டேன் வகையினைச் சேர்ந்த நாயும் வசித்து வந்தது.

    வெடிகுண்டானது தனது வீட்டில் விழுந்ததினை அறிந்து கொண்ட ஜூலியனா, வெடிக்கும் நிலையில் இருந்த போது தனது சிறுநீரின் மூலம் அணைத்து பெரிய விபத்தினைத் தடுத்தது. இந்த செயலுக்காக ப்ளூ கிராசின் விருதினை ஜூலியானா பெற்றது. 

    இந்த நிகழ்ச்சி நடந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நவம்பர் மாதம் 1944ம் ஆண்டு தனது எஜமானரின் ஷூ கடையில் ஏற்பட்ட தீவிபத்தினைக் கண்டறிந்து உயிரிழப்புகள் எதுவும் ஏற்படாமல் தடுத்தது. இந்த செயலுக்காக இரண்டாவது முறையாக ஜூலியனா ப்ளூ கிராஸ் விருதினைப் பெற்றது.

    எப்படி தெரிந்தது..

    1941ம் பிரிஸ்டோல் என்னும் மாகாணத்தில் நடந்த இந்த நிகழ்வானது காலவெள்ளத்தினால் அடித்துச்செல்லப்பட்டது. 2013ம் ஆண்டு வரை இப்படி ஒரு நிகழ்வு வரலாற்றில் நடந்த சம்பவம் யாருக்கும் தெரியவில்லை.

    2013ம் ஆண்டு ஒரு வீட்டினை சுத்தப்படுத்தும் போது ஜூலியனா வாங்கிய இரண்டாவது விருதும், ஜூலியனாவின் வரையப்பட்ட புகைப்படம் கிடைத்தது. இந்த புகைப்படத்தில் இருந்த தகட்டில் ஜூலியனா எப்படி இரண்டு முறை தனது எஜமானர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றியது என்ற முழு விவரமும் எழுதப்பட்டிருந்தது. இதன் மூலமே இவ்வளவு விடயங்களும் தெரியவந்தன.

    இந்த விருதும் ஜூலியானாவின் புகைப்படமும் ஏலத்தில் விடப்பட்டது. ஆரம்பத் தொகையாக 60 பவுண்டுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் 1100 பவுண்டுகளுக்கு ஏலம் போனது.

    எஜமானர்களுக்கு கடைசிவரை உண்மையாய் இருந்த ஜூலியனா, 1946ம் ஆண்டு விஷமுண்டதால் இறந்தது. ஜூலியனா வீட்டுக் கதவில் இருந்த கடிதம் போடும் இடைவெளியின் வழியே தெரியாத ஒரு நபர் விஷத்தினைத் தூவியுள்ளதாக அந்த தகட்டில் எழுதப்பட்டுள்ளது.

    மாமன்னன் திரைப்படத்தில் மிஷ்கினா? வெளியான புகைப்படம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....