Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஅரசியல் சாசனத்துக்குதான் நீதித்துறை பதிலளிக்கும்: தலைமை நீதிபதி

    அரசியல் சாசனத்துக்குதான் நீதித்துறை பதிலளிக்கும்: தலைமை நீதிபதி

    நாட்டினை ஆளும் கட்சிகளின்  செயல்கள் நீதித்துறையின் ஒப்புதலோடு நடைபெறுகிறது எனவும், எதிர் கட்சிக்களின் செயல்களுக்கு நீதித்துறை துணையாய் இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் நீதித்துறை சட்டத்துக்கு மட்டுமே பதிலளிக்கும் என இந்தியத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறியுள்ளார்.

    இது குறித்து பேசிய தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ’75வது சுதந்திர தினத்தினை இந்த வருடம் கொண்டாட உள்ளோம். இந்தியா குடியரசாகி 72 வருடங்கள் முடிந்து விட்டன. இவ்வளவு காலங்கள் கடந்தும் இன்னும் சட்டத்தினைப் பற்றிய ஒரு முழுமையான புரிதல் நம்மிடையே இல்லை என்றே கூற வேண்டும்.’

    அதிகாரத்தில் இருக்கும் கட்சிகள் தங்களது செயல்பாடுகள் நீதித்துறையின் ஒப்புதலோடு நடைபெறுகிறது என்று எண்ணுகின்றன. எதிர் கட்சிகளோ தங்களது செயல்பாடுகளுக்கு நீதித்துறை துணை நிற்க வேண்டும் என்று எண்ணுகிறது. குறைபாடுகளை உடைய இந்த எண்ணமானது சட்டத்தினையும், சட்ட நிறுவனங்களையும் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்வதிலிருந்து மக்களைத் தடுக்கிறது.’

    ‘இம்மாதிரியான எண்ணங்களினால் பொதுமக்கள் நீதிமன்றத்தினை நாடுவதற்கு யோசிக்கின்றனர். தங்களது பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வாக சட்ட நிறுவனங்கள் இருந்த போதிலும் சரியான புரிதல் இல்லாத காரணத்தினால் அவற்றை நாடுவதற்கு மக்கள் மறந்து விடுகின்றனர். நீதித்துறையானது சட்டத்துக்கு மட்டுமே பதிலளிக்கும்.’ என்று கூறியுள்ளார்.

    தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி, ‘உள்ளடக்கக் கோட்பாடு என்பது பொதுவானது. இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் இந்த கோட்பாட்டினை மதிக்க வேண்டும். அமைதிக்கு முக்கிய காரணமாய் விளங்கும் ஒற்றுமையை வலுப்படுத்த இந்த கோட்பாடு உதவுகிறது. நம்மை ஒன்றுபடுத்தும் கருத்துகளில் மட்டுமே கவனத்தினை செலுத்த வேண்டும்.’

    மனிதர்களை வேற்றுமைப்படுத்தும் அனைத்து பிரச்சனைகளுக்கு எதிராக எழுவது மட்டுமின்றி மனிதகுல வளர்ச்சிக்கான பாதைகளில் நமது கவனத்தினை செலுத்த வேண்டும்.’ என்று கூறியுள்ளார்.

    முடிந்தது இந்தியாவின் முதல் இன்னிங்ஸ்; சதமடித்த ரவீந்திர ஜடேஜா!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....