Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதடைப்பட்ட ஜியோ சேவை... சிரமத்திற்குள்ளான பயனர்கள்

    தடைப்பட்ட ஜியோ சேவை… சிரமத்திற்குள்ளான பயனர்கள்

    ஜியோ பயனர்களுக்கு இன்று காலை அழைப்பு மற்றும் குறுஞ்செய்திகள் போன்ற சேவைகள் முடங்கியதால், பயனர்கள் சிரமத்திற்குள்ளாகினர்.   

    இந்தியாவின் முன்னணி தகவல் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்று ஜியோ. இணையதள வசதியில் ஒரு பெரிய புரட்சியை ஜியோ நிறுவனம் செய்ததாகவே கூறலாம். 

    நாடு முழுவதும் ஏராளமான பயனர்கள் ஜியோ சேவையை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்ட பின் சில நகரங்களில் முதற்கட்டமாக 5ஜி சேவையும் வழங்கி வருகிறது.

    இந்நிலையில், இன்று காலை 6 மணி முதல் 9 மணி வரை பல்வேறு பகுதிகளில் ஜியோ சேவை முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அழைப்பு மற்றும் குறுஞ்செய்திகள் போன்ற சேவைகள் முடங்கியதால் பயனர்கள் சிரமத்திற்குள்ளாகினர். சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு சேவைகள் செயல்பட தொடங்கியதாக கூறப்படுகிறது. 

    ஆனால், தற்போது வரை ஜியோ நிறுவனம் இதுகுறித்து எந்தவித தகவலையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    மதுபான கடைக்கு அனுமதி கொடுக்கக் கூடாது: மதுபான கடை திறப்பு எதிர்ப்பு போராட்டக் குழு கண்டன ஆர்ப்பாட்டம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....