Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதிருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற டிசம்பர் 6 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை! எதற்கு தெரியுமா?

    திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற டிசம்பர் 6 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை! எதற்கு தெரியுமா?

    திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற டிசம்பர் 6 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோயில் அண்ணாமலையார் திருக்கோயில் ஆகும். இங்கு ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்வர். 

    இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. டிசம்பர் 3 ஆம் தேதி பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் டிசம்பர் 6 ஆம் தேதி கோயிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலையின் மீது ஏற்றப்படும். 

    இந்நிலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, டிசம்பர் 6 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

    வருகிற 6 ஆம் தேதி அதிகாலை பரணி தீபத்திற்கு 3000 முதல் 4000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், மாலை மகா தீபத்திற்கு 5000 முதல் 6 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    கங்கைகொண்ட சோழபுரத்தில் அகழாய்வுப் பணிகளை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....