Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரியலூரில் ரூ.83.82 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    அரியலூரில் ரூ.83.82 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரியலூர் மாவட்டத்திற்கான ரூ.83.82 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (29.11.2022) அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.30.26 கோடி செலவில் 51 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.1.56 கோடி மதிப்பீட்டிலான 3 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 27,070 பயனாளிகளுக்கு ரூ.52 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இன்றைய தினம் அரியலூரில் நடைபெற்ற மாபெரும் அரசு விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இம்மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ஆதனக்குறிச்சி, குருவாடி, கோவிலூர், எரக்குடி, பொய்யாதநல்லூர், அருங்கால், சுப்புராயபுரம், கருப்பிலாக்கட்டளை, கீழநத்தம், இலையூர் மற்றும் காட்டாத்தூர் ஆகிய இடங்களில் 2 கோடியே 90 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 11 துணை சுகாதார நிலையக் கட்டடங்கள், அங்கனூர், குமிழியம், குருவாடி, மணக்கால், பொய்யாதநல்லூர், பொய்யூர், தா.பழூர் ஆகிய இடங்களில் 1 கோடியே 75 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 7 செவிலியர் குடியிருப்புகள், 61 இலட்சம் ரூபாய் செலவில் அரியலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள நீராவி சலவையகக் கட்டடம், தா. பழூர் மற்றும் இடையக்குறிச்சி ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1 கோடியே 8 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 புறநோயளிகள் சிகிச்சை பிரிவுக் கட்டடங்கள், ஜெயங்கொண்டத்தில் 18 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவுக் கட்டடம்;

    பருக்கல்லில் 5 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அரங்க மேடை கட்டடம், இருகையூர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 13 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடம்;நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் உடையார்பாளையத்தில் 42 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் புதிய பூங்கா என மொத்தம் 30 கோடியே 26 இலட்சத்து 11 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 51 முடிவுற்ற திட்டப்பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

    மேலும், இவ்விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் அரியலூர் வட்டம், மேலப்பழுவூர் மற்றும் இலந்தைகூடம் ஆகிய இடங்களில் தலா 48 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 2 கால்நடை மருந்தகக் கட்டடங்கள்;
    வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் அரியலூரில் 60 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அரியலூர் மாவட்ட வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் சார்பில் கட்டப்படவுள்ள புதிய பெட்ரோல் பங்க்; என மொத்தம் 1 கோடியே 56 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 3 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

    இவ்விழாவில் முதலமைச்சர் அவர்கள் பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் 5,289 பயனாளிகளுக்கு ரூ.7.66 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் 1,576 பயனாளிகளுக்கு ரூ.12.03 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 1,300 பயனாளிகளுக்கு ரூ.19.16 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 297 பயனாளிகளுக்கு ரூ.14.68 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் சார்பில் 176 பயனாளிகளுக்கு ரூ.16.10 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்;
    கால்நடைப் பராமரிப்புத் துறையின் சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.11.68 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்; என மொத்தம் 27,070 பயனாளிகளுக்கு ரூ.52 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்.

    இந்த விழாவில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, மாண்புமிகு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மாண்புமிகு சட்டத் துறை அமைச்சர் எஸ். இரகுபதி, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ. ராசா, தொல். திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.கே. சின்னப்பா, க.சொ.க. கண்ணன், எம். பிரபாகரன், அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பெ. ரமண சரஸ்வதி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ப. ஸ்ரீ வெங்கட பிரியா, இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    கங்கைகொண்ட சோழபுரத்தில் அகழாய்வுப் பணிகளை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....