Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்வடகொரியா ஏவுகணை சோதனை...மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஜப்பான்!

    வடகொரியா ஏவுகணை சோதனை…மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஜப்பான்!

    ஜப்பான் நாட்டின் வான்வெளியில் பறந்த வடகொரிய ஏவுகணையால் அந்நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதை எதிர்க்கும் விதமாக வடகொரியா ஏவுகணையை ஏவி அச்சுறுத்தி வருகிறது. 

    ஜப்பான் கடற்பகுதியின் மீது கடந்த அக்டோபர் 1-ம் தேதி இரண்டு பிளாஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தியது. இதற்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தன.

    இப்படியான சூழலில், உள்ளூர் நேரப்படி இன்று காலை மீண்டும் ஜப்பான் மீது ஏவுகணை வீசியுள்ளது வடகொரியா. இது பசுபிக் பெருங்கடலில் விழுவதற்கு முன்பு ஜப்பானின் தோஹோகு பகுதியில் 1000 கிலோமீட்டர் உயரத்தில் 20 நிமிடங்கள் பறந்து சென்றதாக ஜப்பானிய நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். 

    மேலும், ஜப்பான் நாட்டின் வான்வெளியில் பறந்த வடகொரிய ஏவுகணையால் அந்நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், பதட்டம் நிலவி வருகிறது.  

    இதையும் படிங்க: சட்டவிரோத சுவர் விளம்பரங்களை தடை செய்ய வேண்டும் – கடிதம் எழுதிய அன்புமணி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....