Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு!

    மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு!

    மெட்ரிக் பள்ளிகளுக்கு வரும் 9 ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

    தமிழகத்தில் பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம்  வகுப்புகளுக்கு அக்டோபர் மாதம் 10 ஆம்  தேதியன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. 

    இந்நிலையில், மெட்ரிக் பள்ளிகளுக்கும் வருகிற 9 ஆம் தேதி வரை விடுமுறை நீடிக்கப்பட்ட்டுள்ளதாக மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநர் கருப்பசாமி தெரிவித்துள்ளார். 

    மேலும் அவர், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான தசரா பண்டிகை விடுமுறை  இன்றுடன் நிறைவு பெறுவதாகவும் அறிவித்துள்ளார். 

    அதேபோல், நாளை பள்ளிகளை  திறப்பதா அல்லது விடுமுறையை தொடர்வதா என்ற கேள்வி குழப்பம் நிலவி வந்த நிலையில், இன்று மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநர் கருப்பசாமி இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். 

    முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி காலாண்டுத் தேர்வு முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து, அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு, அக்டோபர் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: சட்டவிரோத சுவர் விளம்பரங்களை தடை செய்ய வேண்டும் – கடிதம் எழுதிய அன்புமணி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....