Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னைக்கு திரும்பும் பொதுமக்களுக்கு கூடுதலாக 1,150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    சென்னைக்கு திரும்பும் பொதுமக்களுக்கு கூடுதலாக 1,150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    பண்டிகை கால விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பும் பொதுமக்களுக்கு கூடுதலாக 1,150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. 

    ஆயுத பூஜை, விஜய தசமி மற்றும் தசரா பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பலரும் அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.

    இதன் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 30), முதல் மூன்று நாட்களுக்கு கோயம்பேடு உள்ளிட்ட 3 முக்கிய பேருந்து நிலையங்களில் இருந்து 3,700 கூடுதல் சிறப்பு பேருந்துகள் தமிழ்நாடு போக்குவரத்துத்துறை சார்பில் இயக்கப்பட்டது. 

    இந்த வசதியின் வாயிலாக சென்னையிலிருந்து மட்டும் சுமார் 6 லட்சம் பேர் அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில், இன்றுடன் பண்டிகைகள்  நிறைவு பெறுவதால், நாளை அனைவருக்கும் வேலை நாள் தொடங்குகிறது. இதனால், பொதுமக்கள் மீண்டும் சென்னைக்கு திரும்புவார்கள். இவர்களின் வசதிக்காக இன்றும் நாளையும் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. 

    இதன்படி, பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு தினசரி இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் இன்று மற்றும் நாளை என 2 நாட்களுக்கு கூடுதலாக 1,150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    இதையும் படிங்க: துபாயில் 148 கோடி செலவில் இந்து கோயில்; தசரா பண்டிகை நாளான இன்று கோலாகலமாக திறப்பு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....