Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்'திமுக அரசு ஆன்மீகத்திற்கு எதிரானதல்ல'- முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

    ‘திமுக அரசு ஆன்மீகத்திற்கு எதிரானதல்ல’- முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

    திமுக ஆன்மிகத்துக்கு எதிரானது இல்லை என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சகம் சார்பில் வள்ளலார் முப்பெரும் விழாவானது இன்று சென்னையில் நடைபெற்றது. 

    இதில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தபால் உரை, லோகா, சிறப்பு மலர் ஆகியவற்றை வெளியிட்டார். 

    அப்போது, அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது:

    அமைச்சர் சேகர்பாபு ஆன்மீக செயற்பாட்டாளர். கோட்டைக்கு வருவதை விட கோயிலுக்கு அதிகம் செல்லும் அமைச்சர் சேகர்பாபு. கோயில்களில் நடைபெறும் அறப்பணிகளை நாள்தோறும் கண்காணித்து வருகிறார். 

    வள்ளலாரை போற்றுவது திமுக அரசின் கடமை. வள்ளலார் பிறந்த நாளையொட்டி ஓராண்டு முழுவதும் அன்னதானம் வழங்கப்படுகிற வடலூரில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் வள்ளலார் மையம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும். 

    பசி பிணியைத் தடுத்த வள்ளலார் வழியில் நடக்கும் திமுக அரசு, பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. சமுதாயத்தில் ஏற்ற தாழ்வுகள் இருக்க கூடாது. சமூக நல்லிணக்கம் வேண்டும். 

    திமுக அரசு ஆன்மீகத்துக்கு எதிரானது, மக்களின் நம்பிக்கைக்கு எதிரானது என சிலர் பரப்பி வருகிறார்கள். திமுக அரசு ஆன்மீகத்திற்கு எதிரானதல்ல. தமிழ் மண்ணின் சமய பண்பாட்டை அறிந்து திமுக அரசு செயல்படுகிறது.

    இவ்வாறு, அவர் பேசியுள்ளார். 

    இதையும் படிங்க: 4 கால்களும் இல்லாமல் பிறந்த ஆட்டுக்குட்டி! பாசத்துடன் வளர்த்து வரும் மூதாட்டியின் அன்பு கதை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....