Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்நெருங்கும் 257 கி.மீ வேக சூறாவளி... அச்சத்தில் ஜப்பான் மக்கள்

    நெருங்கும் 257 கி.மீ வேக சூறாவளி… அச்சத்தில் ஜப்பான் மக்கள்

    கிழக்கு ஆசிய நாடான ஜப்பானை நெருங்கும் சூறாவளி மணிக்கு 257 கி.மீ., வேகத்தில் வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில், கன மழை, புயலுக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இது குறித்து, அந்நாட்டு வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    கிழக்கு சீன கடலில் உருவாகியுள்ள சூறாவளி, ஜப்பான் தீவுகளை கடுமையாக தாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்,  கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த சூறாவளி காற்று மிக வலுவாக இருக்கும். கடலில் 50 அடிக்கும் அதிகமான அளவு உயரத்துக்கு ராட்சத அலைகள் உருவாகும்.

    ஜப்பானின் ஒகினாவாவிலிருந்து கிழக்கே 230 கி.மீ., தொலைவில் மையம் கொண்டிருக்கும் இந்த சூறாவளி, ருயுக்யா தீவுகளை நோக்கி நகர்ந்து வருகிறது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து ஜப்பான் அரசு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துவருகிறது. இருப்பினும் மக்கள் அச்சத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், கிழக்கு சீன கடலில் உருவாகியுள்ள இந்த சூறாவளிக்கு ‘ஹின்னம்னார்’ என பெயரிடப்பட்டுள்ளது. 

    17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....