Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாயும்தாங் பள்ளத்தாக்கில் நிலச்சரிவு; சிக்கிய 74 சுற்றுலாப் பயணிகள்

    யும்தாங் பள்ளத்தாக்கில் நிலச்சரிவு; சிக்கிய 74 சுற்றுலாப் பயணிகள்

    வடக்கு சிக்கிமில் உள்ள யும்தாங் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கித் தவித்த 74 சுற்றுலாப் பயணிகளை இந்திய ராணுவம் பத்திரமாக மீட்டுள்ளது.

    சிக்கிமில் உள்ள யும்தாங் பள்ளத்தாக்கிலிருந்து 19 கி.மீ தொலைவில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவித்து வருவதாக மீட்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.

    இந்நிலையில் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அச்சமயத்தில் நிலச்சரிவில் 8 சுற்றுலா வாகனங்கள் சிக்கியிருந்தது. அதைத் தொடர்ந்து மரப்பலகைகள் மற்றும் கயிறுகளால் ஒரு நடைபாதை உருவாக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகளை மீட்க மனிதச் சங்கிலி அமைக்கப்பட்டது. இதன்பின்பு, நிலச்சரிவில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டனர். 

    மேலும், இந்த நிலச்சரிவில் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, இந்திய ராணுவம்  பள்ளத்தாக்கில் சிக்கித் தவித்த பெண்கள், குழந்தைகள் உள்பட 74 சுற்றுலாப் பயணிகளை பத்திரமாக மீட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

    எட்டு வழி சாலையும் திமுகவின் அந்தர் பல்டியும்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....