Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசீன தயாரிப்பான இந்திய தேசிய கொடி -சபாநாயகர் அப்பாவு வேதனை

    சீன தயாரிப்பான இந்திய தேசிய கொடி -சபாநாயகர் அப்பாவு வேதனை

    கனடா நாட்டில் ஹேலிஃபாக்ஸ் நகரில் காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு காமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளின் சபாநாயகர்கள் பங்கேற்றனர். இதில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு உள்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் சபாநாயகர்கள் பங்கேற்றனர்.அப்போது ஓம் பிர்லா தலைமை வகிக்க, அனைத்து மாநில சபாநாயகர்களும் இந்திய தேசியக்கொடியைக் கையிலேந்தியபடி பேரணி சென்றனர். இந்த நிலையில், சபாநாயகர்கள் ஏந்தியிருந்த தேசியக்கொடியில் “மேட் இன் சீனா” என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது தற்போது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

    இதுபற்றி சபாநாயகர் அப்பாவுவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- இந்தியாவின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் தேசிய கொடிகளை ஏந்தியபடி சென்றோம். அந்த கொடிகளில் ‘மேட் இன் சீனா’ என்று இருந்தது. அதை கண்டு பாராளுமன்ற சபாநாயகரிடம் தெரிவித்தோம். எல்லோருக்கும் கஷ்டமாக இருந்தது. சீனாவில் இருந்து தேசிய கொடியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.இந்தியாவில் தமிழ்நாட்டிலேயே கரூர், நாமக்கல், சிவகாசி பகுதிகளிலேயே தேசியக்கொடி தயாரிப்பதற்கான அனைத்து வசதிகளும் உள்ளன. இரவு சொன்னால் காலையில் 100 கொடியை தருவார்கள்.ஆனால், இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது எனத் தெரியவில்லை. மேலும் சீனாவின் பெயரோடு கொடியைத் தாங்கியது வேதனையாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

    1962 சீனாவுக்கு எதிரான போர் நடந்தது. அதன் பின் 57 ஆண்டுகளில் பெரியளவில் இந்திய – சீன எல்லையில் மிகப்பெரியபதற்றமோ, பிரச்னையுமில்லை. அண்மையில் மகாபலிபுரத்தில் பிரதமர் மோடி – சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு நடந்தது. அதன் பின் சில நேரங்களில் பதற்றம் நிலவி வருகிறது. குறிப்பாக கல்வான் பள்ளத்தாக்கில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டது வேதனையான விஷயம். அதில் வீரமரணமடைந்த வீரர்களின் கல்லறை கூட காயவில்லை. இதற்குள் இந்திய தேசியக்கொடியை சீனாவில் இருந்து தயாரித்து, அதை பார்லிமென்ட் உள்ளிட்ட அனைத்து மாநில சபாநாயகர்களும் கையில் ஏந்தி சென்றது எல்லாருக்கும் வேதனையான விஷயம்.இந்திய பெருங்கடல் பகுதி அமைதியாகவும், இந்தியாவுக்கு பாதுகாப்பாகவும் இருந்தது. அங்கு சீன உளவுக்கப்பல் சென்றது வேதனையானது. கவனிக்கத்தக்க விஷயம்.சீனாவில் இருந்து 800 மடங்கு இறக்குமதி செய்வதும், தேசியக்கொடியை கூட இறக்குமதி செய்வதும் வேதனையான விஷயம் தான் என எண்ணுகிறேன்.

    `இந்திய தேசியக்கொடிகளில் ‘மேட் இன் சீனா’ என இருந்ததைக் கண்டு நாடாளுமன்ற சபாநாயகரிடம் அதைப் பற்றிச் சொன்னவுடனேயே அவர் சிரித்துக்கொண்டார். ஆனால் எல்லோருக்கும் கஷ்டம் இருந்தது. எனத் தனியார் செய்தித் தொலைக்காட்சியிடம் தொலைபேசி வாயிலாகத் தெரிவித்தார்.

    வெள்ளரிக்காய் வளர்த்து கின்னசில் இடம் பிடித்த விவசாயி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....