Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரிஆளுநரை திரும்பப் பெற வேண்டும் எனக் கூறுவது தேவையில்லாத ஒன்று- தமிழிசை கருத்து

    ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் எனக் கூறுவது தேவையில்லாத ஒன்று- தமிழிசை கருத்து

    ஆளுநரை திரும்பப் பெறக் கடிதம் எழுதுவதால் எந்தப் பயனும் இல்லை என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

    புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார். 

    இதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, புதுச்சேரியில் கடல் அரிப்பினால் கடலையொட்டி வசிக்கும் மீனவர்கள் பாதிக்கப்படுவதாகவும், அதனால் 60 கோடி ரூபாய் வரை கடல் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

    மேலும் அவர், அவ்வாறு செய்லபடுத்தப்பட்டால் கடல் அரிப்பு தடுக்கப்பட்டு கடலோரம் வசிக்கும் மீனவ கிராமங்களில் பாதிப்பு தடுக்கப்படும் என்றும், தமிழக ஆளுநரை திரும்பப்பெற வலியுறுத்தி திமுக, காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் கூறினார். 

    தொடர்ந்து அவர், ஆளுநருக்கும் கருத்து சொல்ல உரிமை உண்டு என்றும், ஆளுநர் ஒரு கருத்தை சொன்னால் அதற்கு எதிர்க்கருத்து சொல்லலாம் என்றும், அதை விட்டுவிட்டு ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் எனக் கூறுவது தேவையில்லாத ஒன்று எனவும் தெரிவித்துள்ளார். 

    நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்புவதால், எந்த பயனும் இல்லை. நாட்டில் அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு என தமிழிசை தெரிவித்தார்.  

    இதையும் படிங்க: முதலில் வார்னிங்., அபராதம்., ஏலம்., குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை எச்சரிக்கும் காவல்துறை..!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....