Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா'காவல்துறை அலுவலகங்களில் சிசிடிவி கட்டாயம்' - எச்சரித்த உச்சநீதிமன்றம்!

    ‘காவல்துறை அலுவலகங்களில் சிசிடிவி கட்டாயம்’ – எச்சரித்த உச்சநீதிமன்றம்!

    அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவதை ஒரு மாதத்துக்குள் உறுதி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    உலகளவில் அனைத்து நாட்டிலும், நாட்டின் வளர்ச்சியிலும் பாதுகாப்பிலும் காவல்துறை, புலனாய்வு அமைப்புகள் சிபிஐ, அமலாக்கத் துறை, தேசிய புலனாய்வு முகமை போன்றவை  முக்கியப் பங்கு வகிக்கின்றன. 

    இந்த அமைப்புகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள அலுவலங்களில் விசாரணை நடைபெறுவது வழக்கம். இதைக் காரணம் கூறி, கடந்த 2020-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் மேற்குறிப்பிட்ட விசாரணை அலுவலகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டது.

    ஆனால், உச்சநீதிமன்றத்தின் உத்தரவு முழுவதுமாக நிறைவேற்றப்படவில்லை.  இந்நிலையில் இதுதொடர்பான மனுவை விசாரித்த நீதிபதி பி.ஆர். ஹவாய் தலைமையிலான விக்ரம் நாத், சஞ்சய் கரோல் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.

    விசாரனை முடிவில் நாட்டில் அனைத்து காவல் நிலையங்கள் உள்ளிட்ட விசாரணை இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவதை ஒரு மாதத்துக்குள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

    மேலும், இந்த உத்தரவை பின்பற்றத் தவறும்பட்சத்தில், மத்திய உள்துறை செயலர், மாநில தலைமைச் செயலர்கள், மாநில உள்துறை செயலர்கள் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

    காந்தாரா 2-வில் ரஜினிகாந்த் – என்ன சொல்கிறார் இயக்குநர்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....