Thursday, March 28, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்காந்தாரா 2-வில் ரஜினிகாந்த் - என்ன சொல்கிறார் இயக்குநர்?

    காந்தாரா 2-வில் ரஜினிகாந்த் – என்ன சொல்கிறார் இயக்குநர்?

    காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

    ரிஷப் ஷெட்டி நாயகனாக நடித்தும், இயக்கவும் செய்த படம் ‘காந்தாரா’. சப்தமி கௌடா, மானசி, கிஷோர் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி கன்னட மொழியில் இப்படம் வெளியானது. 

    கன்னடத்தில் வெளியாகி யாரும் எதிர்பாரா வகையில் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, அடுத்த சில நாள்களில் இப்படம் டப் செய்யப்பட்டு முக்கிய மொழிகளில் வெளியிடப்பட்டது. 

    இத்திரைப்படத்தை ரஜினிகாந்த், தனுஷ் உட்பட பல திரையுலக பிரபலங்களும்  பாராட்டி பேசினர். 16 கோடி அளவில் தயாரான இத்திரைப்படம் 375 கோடி அளவில் வசூல் செய்து அசத்தியது. 

    காந்தாரா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகவுள்ளது. அதோடு, இப்படத்தை ஆங்கிலத்தில் டப் செய்து வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது. 

    இந்நிலையில், காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இது குறித்து, பத்திரிகையாளர்கள் ரிஷப் ஷெட்டியிடம் கேட்கும்போது, அவர் சிரித்துக்கொண்டே இந்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார். 

    நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிவடைந்தவுடன் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘லால் சலாம்’ படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை; எச்.ஐ.வி நோயிலிருந்து மீண்ட நபர்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....