Monday, March 25, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்அமெரிக்காவில் கடும் பனிப்புயல்; 1,300 விமானங்கள் ரத்து

    அமெரிக்காவில் கடும் பனிப்புயல்; 1,300 விமானங்கள் ரத்து

    அமெரிக்காவில் கடும் பனிப்புயல் வீசி வருவதன் காரணமாக 1,300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் வரலாறு காணாத வகையில் கடும் பனி பொழிந்தது. கடும் பனி பொழிவின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் தங்களின் வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருக்கும் சூழல் உண்டானது. 

    இந்நிலையில், அமெரிக்காவில் மீண்டும் பனிப்புயல் வீசி வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியைச் சுற்றி கடும் பனிப்பொழிவுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள நெடுஞ்சாலைகள் உள்பட அனைத்து சாலைகளிலும் பனி கொட்டிக் கிடக்கிறது. 

    தற்போது அமெரிக்காவில் வீசும் பனிப்புயல் காரணமாக 1300 க்கும் மேற்ப்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தொடர்ச்சியாக அறிவிப்புகள் அளிக்கப்பட்டு வருகின்றன. 

    இந்தப் பனிப்புயல் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதோடு, பயணிகளும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். 

    தனுஷ் படத்தில் இணைந்த ‘உறியடி’ விஜயகுமார்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....