Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஇன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலால் குழந்தைகள் பாதிப்பு....

    இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலால் குழந்தைகள் பாதிப்பு….

    இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலால் தமிழகத்தில் 282 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

    தமிழகத்தில் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் பரவிவருகிறது. இதனால் குழந்தைகள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், நேற்று ஒரே நாளில் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டனர். 

    இதையடுத்து, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தைகளை அனுமதித்தும் படுக்கைகள் கிடைக்கவில்லை என தகவல் பரவின. இந்நிலையில், எழும்பூர் மருத்துவமனையில் இன்று காலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செயதார்.  

    இதையும் படிங்க: மராட்டியத்தில் விவசாயிகள் தற்கொலை – பதறவைக்கும் ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

    அப்போது, எழும்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 121 குழந்தைகளுக்கு சாதாரண காய்ச்சலே உள்ளது. தமிழகம் முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலால் 282 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 13 குழந்தைகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்று  அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

    மேலும், அவர், டெங்கு காய்ச்சலால் 243 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்குவை ஒழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. காய்ச்சல் பரவல் தடுக்க அடிக்கடி கைகளை கழுவுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....