Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரிஅடுத்த 'ஷாக்' டிவி மெக்கானிக்கிற்கு 12 லட்சம் மின் கட்டணம் என கூறி அலற விட்ட...

    அடுத்த ‘ஷாக்’ டிவி மெக்கானிக்கிற்கு 12 லட்சம் மின் கட்டணம் என கூறி அலற விட்ட அதிகாரிகள்

    புதுச்சேரியில் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணியாற்றி வருபவரின் வீட்டுக்கு 12 லட்சம் ரூபாய்க்கு மின் கட்டணம் வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    புதுச்சேரியில் மின் துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து மின்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, புதுச்சேரி முத்தியால்பேட்டை விஸ்வநாத நகர், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் சரவணன். இவர் தனது மனநலம் பாதிக்கப்பட்ட மகனுடன் வீட்டிலேயே மெக்கானிக் வேலை செய்து வருகிறார். இவரது வீட்டில் வரதராஜு என்பவர் வாடகையாளாராக இருந்து வருகிறார். அதே பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வரதராஜு  காவலாளியாக பணியாற்றி வருகிறார். 

    சரவணன் வீட்டுக்கு மின் கட்டணம் மாதம் 800 ரூபாய் வரை வருவது தான் வழக்கம். கடந்த மாதம் ரூபாய் 680 மின் கட்டண தொகையாக வந்துள்ளது. ஆனால், இந்த மாதம் அவருக்கு மின் கட்டணம் ரூபாய் 12,26,944 என்று வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

    இதையும் படிங்க: ரகசிய லாக்கர்களில் சிக்கிய 431 கிலோ தங்கம்; அமலாக்கத்துறையை அதிர வைத்த வங்கி மோசடி வழக்கு

    பிறகு, முத்தியால் பேட்டையில் இருக்கும் மின் அலுவகத்துக்கு சென்று விசாரித்தனர். அதற்கு அதிகாரிகள், மின்சார ரீடிங் 21 ஆயிரத்து 115 என்பதற்கு பதிலாக தவறாக கடைசியில் ஒரு பூஜ்ஜியம் சேர்த்துவிட்டனர். அதனால், 2 லட்சத்து 11 ஆயிரத்து 150 என வந்துவிட்டது. இந்த மின் ரீடிங் கட்டணத்தை கணக்கிட்டு ரூ.12 லட்சத்து 26 ஆயிரத்து 944 என குறிப்பிட்டுவிட்டனர். அதைச் சரி செய்து தருகிறோம் என தெரிவித்துள்ளனர்.

    இதேபோல், கடந்த வாரம் ஈரோடு மாவட்டம், தாளவாடியில் கூலி தொழிலாளி ஒருவரின் வீட்டுக்கு ரூ.94,985 மின் கட்டணம் வந்திருந்ததை அடுத்து, மின் கணக்கீட்டாளர் தவறாக கணக்கெடுத்துள்ளார் என்பது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....