Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாரகசிய லாக்கர்களில் சிக்கிய 431 கிலோ தங்கம்; அமலாக்கத்துறையை அதிர வைத்த வங்கி மோசடி வழக்கு

    ரகசிய லாக்கர்களில் சிக்கிய 431 கிலோ தங்கம்; அமலாக்கத்துறையை அதிர வைத்த வங்கி மோசடி வழக்கு

    மும்பையில் பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரகிசிய லாக்கரில் 45 கோடி ரூபாய் மதிப்புள்ள 431 கிலோ தங்கம் சிக்கியுள்ளது. 

    மும்பையில் பரேக் அலுமினெக்கஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் வங்கிகளில் 2 ஆயிரம் கோடிக்கும் மேல் கடன் வாங்கி மோசடி செய்துள்ளதாக, கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை செய்து வருகின்றன. 

    இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக மும்பை ரக்ஷா புல்லியன் மற்றும் கிளாசிக் மார்பிள் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் நேற்று (செப்டம்பர் 14) அமலாக்கத்துறையினர்  சோதனை நடத்தினர். 

    இதையும் படிங்க: ரெய்டில் சிக்கிய கட்டுக்கட்டான பணம், கிலோக் கணக்கான நகைகள் – லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்

    அப்போது ரக்ஷா நிறுவனத்தில் சில லாக்கர்களின் சாவிகள் கிடைத்துள்ளன.  இதைத்தொடர்ந்து, இந்த சாவிகள் குறித்து விசாரித்து அந்த இடத்துக்கு சென்று விசாரித்த அமலாக்கத்துறையினர், அந்தச் சாவிகள் தொடர்புடைய 3 லாக்கர்களை திறந்தனர். 

    அந்த ஒரு லாக்கரில், 91.5 கிலோ தங்கக் கட்டிகள் இருந்தது. மற்ற இரண்டு லாக்கர்களிலும் 152 கிலோ வெள்ளியும் கண்டுபிடிக்கப்பட்டது. இது மட்டுமின்றி, ரக்ஷா நிறுவனத்திலும் 188 கிலோ வெள்ளியும் கண்டுபிடிக்கப்பட்டது. இவை அனைத்தையும் அமலாக்கத்துறையினர்  பறிமுதல் செய்தனர்.

    அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு-அமைச்சர் மா.சுப்பிரமணியம் பதில்

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....