Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்கடல் கடந்தாலும் மாறாத பண்பாடு! பாலி நகரில் பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பு

    கடல் கடந்தாலும் மாறாத பண்பாடு! பாலி நகரில் பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பு

    ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவுக்கு சென்றுள்ள பிரதமர் மோடிக்கு பாரம்பரிய நடனத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

    இந்தோனேசியாவின் பாலி தீவில் இன்று மற்றும் நாளை நடைபெறுகிற ஜி20 மாநாட்டில் உலகப் பொருளாதாரம், எரிசக்தி, சுற்றுச்சூழல், உக்ரைன்-ரஷ்யா போர் விவகாரம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மற்றும் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று விவாதிக்கின்றனர். 

    முன்னதாக இந்தோனேசியா செல்வதற்கு முன்பாக பிரதமர் மோடி வெளியிட்டிருந்த அறிக்கையில், இந்த மாநாட்டில் ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் உலகின் முக்கிய விவகாரங்களான உலக அளவில் வளர்ச்சியை மீட்டெடுத்தல், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, சுற்றுச்சூழல், சுகாதாரம், டிஜிட்டல் மாற்றங்கள் போன்றவை குறித்து விரிவாக பேச உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். 

    மேலும் ஜி20 கூட்டமைப்புக்கு அடுத்த மாதம் முதல் இந்தியா பொறுப்பேற்க உள்ள நிலையில், அதற்கான லோகோ மற்றும் கருப்பொருள் ஆகியவற்றை பிரதமர் மோடி வெளியிட்டிருந்தார்.

    இந்நிலையில் நேற்று ஜி20 உச்சி மாநாட்டால் பங்கேற்க தனி விமானம் மூலமாக பிரதமர் மோடி பாலி சென்றபோது, அவருக்கு பாரம்பரிய முறைப்படி நடனத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அந்நாட்டில் வாழும் இந்தியர்களும் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர். 

    இதையும் படிங்கமசூதி வடிவிலான பேருந்து நிலையம்! ‘புல்டோசரை வைத்து இடிப்பேன்’ என பாஜக எம்.பி சர்ச்சை பேச்சு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....