Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்மசூதி வடிவிலான பேருந்து நிலையம்! 'புல்டோசரை வைத்து இடிப்பேன்' என பாஜக எம்.பி சர்ச்சை பேச்சு

    மசூதி வடிவிலான பேருந்து நிலையம்! ‘புல்டோசரை வைத்து இடிப்பேன்’ என பாஜக எம்.பி சர்ச்சை பேச்சு

    பேருந்து நிலையம் ஒன்றின்மேல், பெரிய குவிமாடமும் அதன் இரு பக்கங்களிலும் சிறிய அளவில் இரண்டு குவிமாடங்களும் உள்ளதால் அதுவொரு மசூதி தான் என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் தெரிவித்ததோடு, அதை இடிக்க போவதாகவும் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

    சமூக வலைத்தளங்களில் சில புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அந்தப் புகைப்படங்களை வைத்து பார்க்கும்பொழுது, மைசூர்-ஊட்டி சாலையில் உள்ள ஒரு பேருந்து நிலையம் என தெரிகிறது. 

    இது தொடர்பாக பேசிய கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சிம்ஹா, “சமூக வலைத்தளங்களில் நான் அதை பார்த்தேன். அந்த புகைப்படத்தில் பேருந்து நிலையத்தின் மேல் பெரிய குவிமாடமும் அதன் இரு பக்கங்களிலும் இரண்டு சிறிய அளவிலான குவிமாடங்களும் உள்ளன. அது ஒரு மசூதி தான். இன்னும் 3, 4 நாட்களில் அந்தக் கட்டடத்தை இடிக்குமாறு பொறியாளர்களிடம் சொல்லியிருக்கிறேன். அதனை அவர்கள் செய்யவில்லை என்றால், அதை நானே புல்டோசர் வைத்து இடித்து தரைமட்டமாக்குவேன்” என தெரிவித்தார். 

    ஒரு நாடளுமன்ற உறுப்பினரின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே கர்நாடக காங்கிரஸ் தலைவர் சலீம், இது மைசூரு நாடாளுமன்ற உறுப்பினரின் முட்டாள்தனமான கருத்து. அப்படி என்றால் குவிமாடம் இருக்கும் அரசு அலுவலகங்களையும் அவர் இடித்துவிடுவாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதையும் படிங்கதெலுங்கு சூப்பர் ஸ்டாரும் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா காலமானார்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....