Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுமுகமது ஷமி போட்ட 'கர்மா' ட்வீட் ? நீங்களே இப்படி பண்ணலாமா என அஃப்ரிடி அறிவுரை

    முகமது ஷமி போட்ட ‘கர்மா’ ட்வீட் ? நீங்களே இப்படி பண்ணலாமா என அஃப்ரிடி அறிவுரை

    சோயிப் அக்தரின் பதிவுக்கு பதில் பதிவிட்ட முகமது ஷமிக்கு பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஃப்ரடி அறிவுரை வழங்கியுள்ளார். 

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த இருபது ஓவர் உலக கோப்பை தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்தது. இத்தொடரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது. இதனால், பாகிஸ்தான் ரசிகர்கள் மற்றும் வீரர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதயம் உடைந்ததைப் போன்ற எமொஜியை பதிவிட்டிருந்தார். இந்த பதிவுக்கு, இந்திய பந்துவீச்சாளர் முகமது ஷமி ‘மன்னிக்கவும் சகோதரரே..இதுதான் கர்மா’ என பதில் பதிவிட்டுள்ளார். 

    முகமது ஷமியின் இந்த பதிவு தற்போது பெரும் வைரலாகவும், சர்ச்சையாகவும் உருவாகியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஃப்ரடி இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது, நாமெல்லாம் கிரிக்கெட் வீரர்கள், நாம் பலருக்கு ரோல் மாடல்கள். வெறுப்பை வளர்க்கும் செயல்களை நாம் செய்யக்கூடாது. நாமே இது போல செய்தால் மக்களிடமிருந்து என்ன எதிர்பார்க்க முடியும். இது போன்ற விஷயங்களுக்கு முடிவு கட்ட வேண்டும். விளையாட்டின் மூலம் நமது உறவு மேம்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

    முன்னதாக, ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த இருபது ஓவர் உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் தோல்வியுற்றது. அப்போது,  சோயிப் அக்தர் தனது ட்விட்டர் பக்கத்தில்  இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் தகுதி இந்திய அணிக்கு இல்லை என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்கபிரெய்லி எழுத்துக்களுடன் புதிய பெயர் பலகைகள்: தலைமைச்செயலகத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றம்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....