Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்இந்தியாவை 200 ஆண்டுகள் ஆட்டிப்படைத்த இங்கிலாந்து தேசத்தை ஆளப்போகும் இந்திய வம்சாவளி!

    இந்தியாவை 200 ஆண்டுகள் ஆட்டிப்படைத்த இங்கிலாந்து தேசத்தை ஆளப்போகும் இந்திய வம்சாவளி!

    britain new prime minister

    இங்கிலாந்தில் பிரதமர் லிஸ் ட்ரெஸ் பதவி விலகியதை அடுத்து கன்சர்வேட்டிவ் கட்சியின் அதிக ஆதரவைப்பெற்று இந்திய வம்சாவளி ரிஷி சுனக் பிரதமராக போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.

    பிரிட்டனில் நிலவும் பொருளாதார சிக்கைளை சமாளிக்க முடியாமல் லிஸ் ட்ரெஸ் சமீபத்தில் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். இந்த நிலையில் அந்நாட்டின் கன்சர்வேட்டிவ் கட்சியில் உள்ள எம்.பிக்களின் அதிக ஆதரவைப்பெற்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டனின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

    மேலும் அவர் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

    ரிஷி சுனக்-கை எதிர்த்த காலத்தில் இருந்த பென்னி மார்டாண்ட் ஏறத்தாழ 6.30 மணிக்கு ரிஷி சுனக்கிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். பிரிட்டன் பிரதமர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவிக்க நேற்று இந்திய நேரப்படி 06.30 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், பென்னி மார்டாண்ட் விலகியுள்ளார். 

    இதையடுத்து, பிரிட்டன் அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இந்நிலையில், 357 எம்.பி.க்கள் கொண்ட கன்சர்வேட்டிவ் கட்சியில் 200 எம்.பி.களுக்கு மேல் ரிஷி சுனக் ஆதரவைப் பெற்றார். 

    இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களின் நாட்டின் முதல் இந்திய வம்சாவளி பிரதமர் என்ற பெருமையையும் தகுதியையும் ரிஷி சுனக் தற்போது பெற்றுள்ளார். 

    அதேவேளையில், அந்நாட்டின் பிரதமராக அவர் பிரிட்டனின் பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டங்களை வகுக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: மூச்சு திணறலில் தலைநகர்! தீபாவளி கொண்டாட்டத்தால் மிக மோசமான நிலையிக்கு சென்ற தில்லி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....