Friday, March 15, 2024
மேலும்
    Homeவரலாறுதேநீர்...நீங்கள் அறிந்திராத பூர்வ கதை...இதுதான் டீ-யின் கதை

    தேநீர்…நீங்கள் அறிந்திராத பூர்வ கதை…இதுதான் டீ-யின் கதை

    நம்மளோட அன்றாட வாழ்க்கைல எந்த பக்கம் திரும்பினாலும் பக்க கூடிய ஒரு கடைனா, அது டீ கடை தான்.

    இந்த காலகட்டத்துல “டீ ” என்பது நம்ப ஒவ்வொருத்தர் வாழ்விலு கலந்த ஒன்னா மாறிடுச்சு. காலையில எழுந்தது முதல் இரவு தூங்க போற வரைக்கும் பல பேரால அதிகம் பகிர படும் பானம்-னா அது டீ மட்டும் தான்.

    இப்போ இருக்கிற தலைமுறையினர் stress ஆனாலும் சரி, relax -ah இருந்தாலும் சரி அவங்களோட முதல் விருப்பமா இருப்பது டீ தான். இப்படி தமிழ் நாட்டுல மட்டுமில்லாம உலகம் முழுதும் கொண்டாட படுற, மனிதனோட வாழ்க்கையில மட்டும் இல்ல, உணர்வோடு கலந்த இந்த டீ எப்படி உருவாச்சுனு நம்மில் பல பேருக்கு தெரியாது.

    இந்த டீ -க்கு பின்னாடி ஒரு பெரிய வரலாறே இருக்கு.

    இந்த டீ -ய யாரு கண்டுபிடிச்சது, எங்க கண்டு பிடிச்சாங்க, இது எப்படி உலகம் முழுசும் பரவி இவ்ளோ பெரிய இடத்தை பிடிச்சது என்பத பற்றி இந்த தொகுப்புல பாக்கலாம்.

    Tea

    தேநீர் எனப்படும் டீ இந்தியாவை சேர்ந்த பானம் இல்லை , இது சீனர்கள் கண்டுபுடிச்ச அறிய பொக்கிஷம் .கிட்டத்தட்ட கி.மு 3 -ம் நூற்றாண்டுல சீன பேரரசர் “ஷென் நாங்” தற்செயலா டீய கண்டுபிடிச்சதா நம்பப்படுது, அந்த கால கட்டத்துல ஆட்சிய இழந்த பேரரசர் “ஷென் நாங் ” தன்னோட தோட்டத்துல தண்ணீர் கொதிக்க வச்சிட்டு இருந்திருக்காரு, அப்போ தற்செயலா பக்கத்துல இருந்த காட்டுச் செடிகள்ல இருந்த இலைகள் காத்துல பறந்து வந்து அவர் கொதிக்க வச்சிட்டு இருந்த தண்ணில விழுந்திருக்கு. அதைக் குடிச்ச ஷெங் கொஞ்ச நேரம் புத்துணர்ச்சியா உணர்ந்திருக்காரு.அதோட சுவைல ஈர்க்க பட்டிருக்காரு.
    அது என்ன இலைனு கண்டுபிடிச்சு தொடர்ந்து அதை தண்ணில கொதிக்க வச்சு பயன்படுத்தத் தொடங்கியிரு. மேலும் அதோட விடாம அந்த பானத்தை குறித்து பல ஆராய்ச்சிய பண்ணிருக்காரு, அதன் பிறகுதான் “டீ ” என்ற ஒன்று சீனாவுல கண்டுபிடிக்க பட்டது.

    இதற்கு பிறகு “டீ ” மிகுந்த மருத்துவ குணம் இருப்பதாகவும் உடல் சோர்வு,அசதி தலைவலிய உடனே நீக்குவதாலும், இத ஒரு மருந்தா பயன்படுத்த ஆரம்பித்தனர் சீன மக்கள்.

    இப்படியாக “டீ ” பற்றிய செய்தி சீனா முழுவதும் பரவியது. இதன் பிறகுதான் சீன மக்கள் தேயிலை உற்பத்திய அதிக அளவுல செய்ய ஆரம்பிச்சாங்க.

    பின்னர் சீனாவில், சிச்சுவான் மற்றும் யுனானைச் சுற்றியுள்ள மலை தொடர்கள்-ல தேயிலை மரங்கள் அதிகமா விளைஞ்சு இயக்குறத கண்டு பிடிக்குறாங்க அந்த நாட்டு மக்கள். அரசர் “ஷென் நாங்” தான் டீய பிரபலப்படுத்தினார் என்பது அனைவராலும் நம்பப்படுற சீனாவோட புராண கதை.

    ஆனா , முதல் முதல்ல தேயிலையைப் பயன்படுத்துனது சீனர்கள் தான் அப்படிங்கிறதுல எந்த மாற்றமும் இல்ல. ஏன்னா, வரலாற்று ஆய்வாளர்களுக்கு கிடைச்ச எழுத்து வடிவங்களின்படி கிமு 10 நூற்றாண்டுலையே சீனர்கள் தேயிலையைப் பயன்படுத்துனதுக்கான ஆதாரம் இருக்கு. மேலும், கிமு 2 ஆம் நூற்றாண்டுகள்ல சீனாவுல ஹான் அப்படிங்கிற பரம்பரையைச் சேர்ந்தவங்க தேயிலைய மருத்துவப் பயன்பாடுகளுக்காகப் பயன்படுத்தி இருக்காங்க. கிபி 4-ஆம் நூற்றாண்டுல இருந்து 8-ஆம் நூற்றாண்டுக்குள்ள தான் சீனாவுக்குள்ளேயே எல்லாப் பக்கமும் தேயிலை பிரபலமடைய ஆரம்பிச்சிருக்கு. தேயிலைய பயிரிடுறவங்க, தேயிலைய விக்கிறவங்க, தேயிலைய பயன்படுத்தரவங்க அதிகமாக ஆரம்பிச்சாங்க. தேயிலைய விக்கிறவங்க பணக்காரர்களா சீனாவுல வலம் வர ஆரம்பிச்சாங்க.

    The History of Tea | The Origin of Tea in the World

    அதுக்கு அப்புறம் தான் தேனீர் உலகமெங்கும் பிரபலமாக ஆரம்பிச்சிருக்கு. 9-ஆம் நூற்றாண்டு காலத்தில திபெத் நாட்டுல , 13-ஆம் நூற்றாண்டுல ஜப்பான்ல, அப்புறம் 16-ஆம் நூற்றாண்டுல ரஷ்யா, ஐரோப்பா, பிரிட்டிஷ்னு உலகமெங்கும் கொஞ்சம் கொஞ்சமா பரவ ஆரம்பிச்சது.

    தேநீர். 16-ஆம் நூற்றாண்டோட பிற்பகுதியில தான் தங்களோட தினசரி தேவைக்காக அதிக அளவுல தேயிலையை இறக்குமதி செஞ்சிருக்கு பிரிட்டிஷ் அரசாங்கம். அந்த சமயத்துல உலகின் முன்னணி தேயிலை ஏற்றுமதியாளரா இருந்தது சீனா மட்டும் தான். சீனாவைத் தவிர்த்து வேற எங்கயும் அதிக அளவிலான தேயிலை செடிகள் பயிரிடப்படல. அதுனால, தங்களோட மொத்த தேயிலைத் தேவைக்கும் சீனாவையே பிரிட்டிஷ் சார்ந்திருக்க வேண்டியதா இருந்துச்சு.

    17-ஆம் நூற்றாண்டோட பிற்பகுதி மற்றும் 18-ம் நூற்றாண்டோட தொடக்கத்துல இங்கிலாந்துல தேயிலை பயன்பாடு ரொம்ப அதிகமாக ஆரம்பிச்சுது. அதுக்காக அதிக அளவிலான தேயிலையை பிரிட்டிஷ் அரசாங்கம் இறக்குமதி செய்ய வேண்டி இருந்துச்சு. தேயிலைக்கு ஈடா பிரிட்டிஷ்ல அதிகம் விளையும் பருத்திய சீனாக்கு ஏற்றுமதி செய்ய ஆரம்பிச்சாங்க. ஆனா சீனாவோ பருத்திக்கு பதிலா வெள்ளிய கேட்க ஆரம்பிச்சாங்க,

    ஆனா தேயிலைக்காக “ஓப்பியம்” எனப்படும் போதை பொருளை சீன மக்களிடையே பரப்பிச்சு பிரிட்டிஷ் அரசு. இந்த ஒப்பியத்த தேயிலைக்கு பண்டமாற்றம் பண்ண ஆரம்பிச்சி, சீன மக்களை போதைக்கு அடிமையாக்கியது பிரிட்டிஷ் அரசு, ஆனா பிரிட்டிஷ் -யின் இந்த செயல் சீன அரச கடும்கோபத்துக்கு ஆளாகிச்சு.

    இதனால, 1839- ம் ஆண்டுல பிரிட்டிஷோட 20,000 செஸ்ட் ஓப்பியத்தை கடலுக்குள்ள மூழ்கடிச்சிது சீன அரசு .

    அதுக்கு அடுத்த வருஷமே சீனா மேல போரை அறிவிச்சது பிரிட்டிஷ். இதுக்கு பதிலடி கொடுக்கும் விதமா பிரிட்டிஷ்க்கு வித்து வந்த தேயிலை விற்பனைய மொத்தமா நிறுத்தச்சு சீனா. பிரிட்டிஷ்க்கும் சீனாவுக்கு நடந்த இந்த சம்பவங்களைத் தான் வரலாற்றுல ஓப்பியம் போர்னு குறிப்பிடுறாங்க.

    சீனா கூட இப்படியான சம்பவங்கள் நிகழத் தொடங்குனப்பவே தாங்களாகவே தேயிலை பயிரிடனும் முடிவு பண்ணாங்க பிரிட்டிஷ். அதுக்கு அவங்க தேர்ந்தெடுத்த இடம் இந்தியா. இந்தியாவோட வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாம்ல இயற்கையாகவே தேநீர் பயிரிடுவதற்கு ஏற்ற சூழ்நிலையும், பருவநிலையும் இருந்துச்சு. அதோட அதுக்கு முன்னாடியே இந்தியர்கள் தேயிலையை பயிரிட்டு வந்தாங்க. ஆனால், அதை எப்படி முறையா பயன்படுத்துறதுன்னு நமக்கு தெரியாமையே இருந்துச்சு.

    The History of Tea: Steeped in Legend, Admired in Politics, and Consum – Sencha Tea Bar

    இந்த இடத்துல தான் பிரிட்டிஷ் வந்து அதை வணிக ரீதியா பயிரிடறது, அதை சரியான முறையில பயன்படுத்துறதுன்னு பல விஷயங்கள சீனாவுல இருந்து கத்துக்கிட்டு வந்து அதை இந்தியாவுல செய்ய ஆரம்பிச்சாங்க.

    1823-ல் சரியா ஜனவரி 10-ஆம் தேதி தான் அஸ்ஸாம்ல இருந்து தேயிலை இங்கிலாந்துல போய் இறங்கிச்சுனு சொல்லப்படுது. அதுக்கு அப்புறம் இந்தியாவுல தேயிலை பயிரிடுறதுக்கு ஏத்த இடங்களை கண்டுபிடிச்சு, அதிக அளவுல தேயிலையை பயிரிட்டு இங்கிலாந்துக்கு ஏற்றுமதி பண்ணாங்க பிரிட்டிஷ்.

    இதன் பிறகு தான் இந்தியா முழுசும் தேநீர் எனப்படும் இந்த “டீய” மிக அதிகமா பயன்படுத்த ஆராம்பிச்சாங்க இந்தியர்கள்.

    இப்படித்தான் உலகம் முழுசும் டீ “-யோட சாம்ராஜ்யம் உருவாச்சு. தற்போது உலக அளவுல 3000 வகையான டீ மக்கள் மத்தியில புழக்கத்துல இருக்கு. அதோட இல்லாம ஒரு டீ.யோட வில 10 ரூபா -ல ஆரம்பிச்சு 10 கோடிக்கு மேல விக்கப்படுத்துனு சொன்னா உங்களால நம்ப முடியுதா ?

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....