Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்இந்திய பெண் அமெரிக்காவில் நீதிபதி; பெருமையான நிகழ்வு..

    இந்திய பெண் அமெரிக்காவில் நீதிபதி; பெருமையான நிகழ்வு..

    அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நீதிபதி மாவட்ட தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ளார். 

    உலகளவில் இந்தியர்களும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர். பல்வேறு நாடுகளில் அரசியல் சார்ந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் உயர் பதவி வகித்து வருகின்றனர். 

    அந்த வகையில், அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நீதிபதி மாவட்ட தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ளார். அமெரிக்காவின் மாஸசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள ஏயர் மாவட்ட நீதிமன்றத்தில் இணை நீதிபதியாகப் பணியாற்றியவர் தேஜல் மேத்தா. இவர் அந்த நீதிமன்ற தலைமை நீதிபதியாக அண்மையில் பதவியேற்றார்.

    மாஸசூசெட்ஸில் உள்ள கான்கார்ட் பகுதியைச் சேர்ந்த தேஜல் மேத்தா, முதலில் சிவில் பணியில் ஈடுபட்டிருந்தார். பின்னர் மிடில்செக்ஸ் மாவட்ட வழக்குரைஞர் அலுவலகத்தில் இணைந்தார். அங்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்குரைஞராகப் பணியாற்றிய அவர், தற்போது மாவட்ட தலைமை நீதிபதியாக உயர்ந்துள்ளார்.

    அமெரிக்காவில் துணை அதிபராக தற்போது உள்ள கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    தந்தையால் பாலியல் தொல்லைக்கு உள்ளான குஷ்பு; வெளிவந்த தகவல்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....