Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇந்திய மீனவர்கள் 6 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

    இந்திய மீனவர்கள் 6 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

    இந்திய மீனவர்கள் ஆறு பேர் இலங்கை கடற்படையினரால் எல்லை மீறியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து கார்த்திக் என்பவருக்கு சொந்தமான படகில், கார்த்திக் உள்பட ஆறு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். 

    கடந்த திங்கள்கிழமை காலை தேவராஜ், சுரேஷ், திருமேனி, வேல்முருகன், சுந்தரம் மற்றும் கார்த்திக் ஆகியோர் ஜெகதப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க புறப்பட்டனர். 

    அவர்கள் அனைவரும் கச்சத்தீவுக்கும் கோடியரைக்கும் இடைப்பட்ட நடுக்கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். இந்நிலையில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 6 மீனவர்களை கைது செய்ததுடன், அவர்களின் படகையும் கைப்பற்றினர்.

    இதுகுறித்து, இலங்கை கடற்படை தெரிவித்துள்ளதாவது: “கடந்த திங்கள்கிழமை இரவு கோவிலன் கலங்கரைவிளக்க பகுதிக்கு அருகில் படகில் மீன்பிடிப்பது கண்டறியப்பட்டது என்றும், அதன்பின்னர், அங்கிருந்த ஆறு மீனவர்களும் கைது செய்யப்பட்டு காங்கேசன் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்” என்று தெரிவித்துள்ளனர். 

    அமேசான் மழைக்காடுகள் அழிப்பு! காலநிலை மாற்றத்துக்கு வழிவகுக்குமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....