Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபேருந்துகளுக்கான சுங்க கட்டணம் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புது உத்தரவு

    பேருந்துகளுக்கான சுங்க கட்டணம் – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புது உத்தரவு

    சுங்க கட்டண பாஸ் விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. 

    தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் மாத கட்டண முறையில் பாஸ் வழங்கும் முறை அமலில் உள்ளது. இந்த மாத கட்டண முறையில் பேருந்துகள் 50 முறைதான் பயணிக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. 

    இந்நிலையில், பேருந்துகளுக்கு பாஸ் வழங்குவதில் 50 முறை தான் பயணிக்கவேண்டும் என கட்டுப்படுத்தக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. 

    மதுரை, விருதுநகர், திருச்சி தனியார் பேருந்து உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில், சாலைகள் முறையாக பராமரிக்க வேண்டும், சுங்கச்சாவடிகள் சாலைகளின் பராமரிப்பை உறுதிப்படுத்தவேண்டும், மாத கட்டண சலுகை பாஸ் போன்றவற்றை முறைப்படுத்தப்பட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த வழக்கு தொடரப்பட்டு இருந்தது. 

    இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, பேருந்துகள் எத்தனை முறை கடந்து செல்கிறதோ, அதற்கு ஏற்றார்போல் மாதாந்திர சலுகை கட்டண பாஸ் வழங்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.

    இந்திய மீனவர்கள் 6 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....