Monday, May 15, 2023
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாநீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியீடு

    நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியீடு

    நீட் தேர்வுக்காக விண்ணப்பித்தவர்களு நுழைவுச் சீட்டு இன்று இணையதளத்தின் வழியாக வெளியிடப்பட்டுள்ளது. 

    தேசிய தேர்வுகள் முகமை (National Testing Agency) சார்பில், இளநிலை மருத்துவ படிப்புகளுக்காக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் வருகிற 17-ம் தேதி நடைபெற இருக்கிறது.  

    நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரத்து 339 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 2 லட்சத்து 57 ஆயிரத்து 562 பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்து 42 ஆயிரத்து 286 பேர் விண்ணப்பித்துள்ளார்கள். நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ள 497 நகரங்களின் விபரங்களும் கடந்த ஜூன் மாதம் 28-ம் தேதி வெளியானது. 

    இதைத்தொடர்ந்து, நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு திங்கள்கிழமை வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், நுழைவுச் சீட்டு செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணிக்கு வெளியிடப்படும் என அதேசிய தேர்வு முகமை அறிவித்தது. 

    மாணவர்கள் அவர்களது நுழைவுச் சீட்டுகளை இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில் ஏதேனும், சிக்கல்கள் இருந்தால் தேசிய தேர்வுகள் முகமை முகவரி அல்லது 011-40759000 என்ற உதவி எண்ணை தொடர்புக்கொண்டு தெளிவு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    நாகை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....