Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்புதிய திட்டங்களை இந்தியா மீண்டும் தொடங்கும் என ஆப்கானிய வெளியுறவுத்துறை நம்பிக்கை

    புதிய திட்டங்களை இந்தியா மீண்டும் தொடங்கும் என ஆப்கானிய வெளியுறவுத்துறை நம்பிக்கை

    ஆப்கானிஸ்தான் நாட்டில் போர் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த குறைந்தபட்சம் 20 திட்டங்களை மட்டுமாவது, இந்தியா மீண்டும் தொடங்கும் என ஆப்கானிய வெளியுறவுத்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

    ஆப்கானிஸ்தானுடன் இந்தியா கடந்த ஜூன் மாதம் தூதரக உறவை புதுப்பித்துக் கொண்டது. மேலும் இந்தியா ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள தூதரகத்துக்கு தொழில்நுட்ப குழுவையும் அனுப்பியது. 

    இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தான் அரசை கவிழ்த்து, தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. மேலும், அசம்பாவிதங்களும் நடைபெற்று வந்தன. இதன் காரணமாக பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்தியா தனது தூதர்களை திரும்பப் பெற்றுக்கொண்டது. 

    இதனிடையே தற்போது, இந்தியா செய்து கொண்டிருந்த குறைந்தபட்சம் 20 திட்டங்களை மட்டுமாவது, இந்தியா மீண்டும் தொடங்கும் என ஆப்கானிய வெளியுறவுத்துறை அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

    மேலும் இந்தப் புதிய திட்டங்கள் தொடங்கி முடிக்கப்பட்டால், நாட்டில் ஏழ்மையும் வேலைவாய்ப்பின்மையும் ஒழியும் என எதிர்ப்பார்ப்பதாகவும் ஆப்கானிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ஜல்லிக்கட்டு பார்க்க எங்களை அழைக்க மாட்டீர்களா? – நீதிபதியின் கேள்விக்கு தமிழக அரசின் பதில் என்ன?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....