Sunday, March 17, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புஇந்திய தபால் துறையில் பொழியப்போகும் வேலைவாய்ப்பு

    இந்திய தபால் துறையில் பொழியப்போகும் வேலைவாய்ப்பு

    இந்திய தபால் துறையில் 98,083 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    இந்திய தபால் துறையில் 98,083 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் போஸ்ட்மேன், மெயில் கார்டு மற்றும் பன்முக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும், இந்த காலிப்பணியிடங்களிலில் தமிழகத்தில் இருந்து மட்டும் 9,619 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

    போஸ்ட்மேன் – 59,099 ,மெயில் கார்டு – 1445 மற்றும் பன்முக உதவியாளர் – 37, 539 காலிப்பணியிடங்கள் முறையே நிரப்பப்பட உள்ளது. 

    இந்த காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதே சமயம், சில பணியிடங்களுக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வயதுத்தகுதியாக 18 வயது முதல் 32 வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப செயல்முறை விரைவில் இணையதளத்தில் தொடங்கப்பட உள்ளது.  

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....