Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஆபரேஷன் சக்தி: 24 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா நிகழ்த்திய அளப்பரிய சாதனை!

    ஆபரேஷன் சக்தி: 24 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா நிகழ்த்திய அளப்பரிய சாதனை!

    1988ம் ஆண்டு இந்தியா, ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பொக்ரான் எனுமிடத்தில் முதன் முறையாக அணுகுண்டு சோதனை நிகழ்த்தியது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க சோதனை நிகழ்ந்து 24 ஆண்டுகள் ஆனதையொட்டி நேற்று (மே 11) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இந்திய ராணுவ எல்லைக்குட்பட்ட பொக்ரான் என்னும் இடத்தில் இந்திய தனது அணுகுண்டு சோதனை நிகழ்த்த தயாரானது. அந்த நேரத்தில் அணு சக்திகளுக்கு எதிராக பல தடைகள் போடப் பட்டிருந்தன. எனவே வெளிப்படையாக ஒரு அணு சக்தி சோதனையினை நிகழ்த்துவதில் பல சிக்கல்கள் இருந்தன. இவ்வளவு தடைகளையும் மீறி இந்தியா பொக்ரான் சோதனையினை நிகழ்த்திக் காட்டியது பல நாடுகளிடையே அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியது.

    ஆபரேஷன் சக்தி என்ற பெயரில் நடத்தப்பெற்ற இந்த நிகழ்ச்சியில், தொடர்ச்சியாக ஐந்து அணுகுண்டுச் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த வரலாற்றுச் சம்பவத்தினை நிகழ்த்திட இந்திய இராணுவத்துடன், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் முன்னேற்ற அமைப்பு (DRDO), தனிமங்களின் ஆராய்ச்சிகள் தொடர்பான இயக்குநரகம் (AMDER) மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் கை கோர்த்தனர். 

    பொக்ரானில் அணுகுண்டுச் சோதனை நிகழ்த்தியிருந்தாலும், அதற்குத் தேவையான புளுடோனியம் பாபா அணு ஆராய்ச்சி மையத்திலிருந்து எடுத்து வரப்பட்டது. இதற்காக, ஏஎன்-32 என்ற விமானம் பயன்படுத்தப்பட்டது. 

    சரியாக மே 11ம் தேதி 1988ம் ஆண்டு பிற்பகல் 3 மணி 35நிமிடத்தில் நடத்தபப்ட்ட இச்சோதனையின் முடிவிற்குப் பிறகு எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த சோதனையானது வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது என்ற முடிவு எடுக்கப்பட்டது.

    இதன் பிறகே இச்சம்பவத்தினைப் பற்றி உலகிற்கு கூறினார், அப்போதைய பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய். இந்தச் சோதனை நிகழ டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் செய்த உதவி மிகவும் அளப்பரியது.

    இந்த அணுகுண்டு சோதனையின் பிறகே இந்தியா, அணு ஆயுதங்கள் வைத்திருந்த நாடுகளின் பட்டியலில் சேர்ந்தது. இதற்கு முன்னதாக அந்த பட்டியலில் ஐந்து நாடுகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    பொக்ரான் அணுகுண்டு நிகழ்ந்த மே 11ம் தேதியினை பிரதமர் வாஜ்பாய் தேசிய தொழில்நுட்ப தினமாக அறிவித்தார்.

    தேசிய தொழில்நுட்ப தினத்தினை கொண்டாடும் வகையிலும், பொக்ரான் நிகழ்ச்சியினை நினைவு கூறும் வகையிலும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். பிரதமர் மட்டுமல்லாது, இந்திய பாதுகாப்பு அமைச்சகம், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மேலும் பல அமைச்சர்கள், கட்சித் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

    கேன்ஸ் திரைப்பட விழா; இந்திய திரைத்துறையினருக்கு அளிக்கப்படும் உயரிய மரியாதை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....