Tuesday, May 16, 2023
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஉணவகங்களில் 133 கிலோ கெட்டுப்போன இறைச்சி கண்டுபிடிப்பு; நிலைமை நீடித்தால் என்னாகும்?

    உணவகங்களில் 133 கிலோ கெட்டுப்போன இறைச்சி கண்டுபிடிப்பு; நிலைமை நீடித்தால் என்னாகும்?

    அசைவ உணவுகளை விரும்பி உண்பவர்கள் அநேகம் பேர். வீட்டில் அசைவ உணவுகளை சமைத்து சாப்பிடுவது என்றும் நலம் தான். ஆனால் அதுவே, உணவகங்களில் அசைவ உணவுகளை சாப்பிட்டால், நமக்கு நலம் தருமா என்றால், அது கேள்விக்குறி தான்.

    ஏனென்றால், கெட்டுப்போன இறைச்சிகளைப் பயன்படுத்துவதாக சில உணவகங்களில் நடத்திய சோதனை முடிவுகள் கூறுகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள அசைவ உணவகங்களில், உணவு பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், ஏறக்குறைய 133 கிலோகிராம் எடையுள்ள கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்துள்ளனர்.

    கேரள மாநிலத்தில் கடந்த மே மாதம் 2 ஆம் தேதி ஷவர்மா சாப்பிட்டு இளம்பெண் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விழிப்புணர்வோடு செயல்பட்டு வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்கள் மற்றும் ஷவர்மா கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையில் ஆங்காங்கே, கெட்டுப்போன இறைச்சிகளை பறிமுதல் செய்யும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது.

    இந்த வகையில், சேலம் மாவட்டத்தில் உள்ள சில அசைவ உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சிகளைப் பயன்படுத்தி, மக்களின் உயிரோடு விளையாடுவதாக சில புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில், மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அதிகாரி கதிரவன் தலைமையின் கீழ், அதிகாரிகள் 4 பிரிவுகளாக சென்று உணவகங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    சேலம் மாநகர், அயோத்தியாப்பட்டணம், கொங்கணாபுரம், நங்கவள்ளி, ஓமலுார், மகுடஞ்சாவடி, பெத்தநாயக்கன்பாளையம், பனைமரத்துப்பட்டி மற்றும் இடைப்பாடி போன்ற பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில், 19 உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சி பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதில், கோழிக்கறி, ஆட்டுக்கறி, மீன் மற்றும் நண்டு என மொத்தம் 133.8 கிலோகிராம் எடையுள்ள கெட்டுப்போன இறைச்சி வகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ரூபாய் 34,650 மதிப்புள்ள கெட்டுப்போன இறைச்சி அனைத்தும் அழிக்கப்பட்டது. இந்த சோதனையில் மொத்தமாக 8 உணவகங்களுக்கு 13,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    இதுதவிர, மேலும் 22 உணவகங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதன்மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், சோதனையில் சிக்கிய 19 உணவகங்களும் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும், மீண்டும் இதுபோல் கெட்டுப்போன இறைச்சியைப் பயன்படுத்தி மக்களுக்கு தீங்கு விளைவிப்பது தெரிந்தால், மிகக் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இனிமேல் அடிக்கடி, அனைத்து உணவகங்களிலும் திடீர் சோதனை மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    பாஜக அரசு உங்களிடம் இருந்து அனைத்தையும் எடுத்துக் கொள்ளும் – ராகுல் காந்தி காட்டம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....