Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுபயனளிக்காமல் போன பாண்டியாவின் தாண்டவம்.... முன்னிலையில் ஆஸ்திரேலியா

    பயனளிக்காமல் போன பாண்டியாவின் தாண்டவம்…. முன்னிலையில் ஆஸ்திரேலியா

    இந்தியாவுக்கு எதிரான முதல் இருபது ஓவர் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

    ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் முதல் கட்டமாக நேற்று மொஹாலியில் நடைபெற்ற இருபது ஓவர் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் இந்திய அணியும் மோதிக்கொண்டன. 

    இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. இதைத் தொடர்ந்து, இந்திய அணியின் இன்னிங்ஸை கே.எல்.ராகுல் – கேப்டன் ரோஹித் சர்மா கூட்டணி ஆரம்பித்தது. 

    இதையும் படிங்க: இவங்க மட்டும் தான் ஹீரோவா? ரசிகர்களின் செயலினால் கோலி, தோனி மீது கம்பீர் பாய்ச்சல்

    இந்தக் கூட்டணியில் ரோஹித் சர்மா 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதன் பின்பு, விராட் கோலி வந்த வேகத்தில் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சியை கொடுத்தார். ஆனால், மறுபுறம் கே.எல்.ராகுல் சிறப்பாக ஆட, இவருடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இதற்கடுத்து இந்திய அணி ஸ்கோரில் ஏறுமுகம் கண்டது. கே.எல். ராகுல் 55 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப ஹர்திக் பாண்டியா  களமிறங்கினார். பின்பு  சூர்யகுமார் யாதவ் 46 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.

    ஹர்திக் பாண்டியா தாண்டவம் ஆட தொடங்கினார். மறுபுறம் வந்த அக்‌ஷர் படேலும், தினேஷ் கார்த்திக்கும் சொற்ப ரன்களுக்கு பெவிலியன் பக்கம் திரும்பினர். இருப்பினும், ஹர்திக் பாண்டியா தனது தாண்டவத்தை நிறுத்துவதாக இல்லை. இறுதியில் ஓவர்கள் முடிவில் பாண்டியா 7 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 71 ரன்களும் , ஹர்ஷல் படேல் 7 ரன்களுக்கும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

    மொத்தத்தில் இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது. கடினமான இலக்கை அடைய ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் 22 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். கேமரூன் கிரீன் 61 ரன்கள் விளாசி பெவிலியன் திரும்பினார். 

    ஸ்டீவ் ஸ்மித் 35 ரன்கள் அடிக்க, கிளென் மேக்ஸ்வெல் 1 ரன்னுக்கு வெளியேறி அதிர்ச்சி அளித்தார். இதைத் தொடர்ந்து ஜோஷ் இங்லிஸ் 17, டிம் டேவிட் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இருப்பினும், மேத்யூ வேட் சிறப்பாக விளையாட ஆஸ்திரேலிய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். ஆஸ்திரேலியா 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் சேர்த்து வென்றது.

    இந்திய பந்துவீச்சு சார்பில் அக்ஸர் படேல் 3, உமேஷ் யாதவ் 2, யுஜவேந்திர சஹல் 1 விக்கெட் எடுத்தனர். மேலும், இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் இருபது ஓவர் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

    ‘6 பந்துகளில் 6 சிக்ஸர்கள்’ அப்பாவின் ஆட்டத்தை பார்த்த குழந்தை.. ட்விட்டரில் வைரல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....