Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டு'6 பந்துகளில் 6 சிக்ஸர்கள்' அப்பாவின் ஆட்டத்தை பார்த்த குழந்தை.. ட்விட்டரில் வைரல்

    ‘6 பந்துகளில் 6 சிக்ஸர்கள்’ அப்பாவின் ஆட்டத்தை பார்த்த குழந்தை.. ட்விட்டரில் வைரல்

    யுவராஜ் சிங்கின் ட்விட்டர் பதிவு சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

    யுவராஜ் சிங் 2007-ம் ஆண்டு நிகழ்த்திய நிகழ்வை கிரிக்கெட் ரசிகர்கள் எவராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பிராட் ஓவரில் யுவராஜ் சிங் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்து சாதனை செய்து அசத்தினார். 

    இதையும் படிங்க : ‘கோலியை ஓய்வு பெற சொல்லுங்கள் ‘ – அப்ரிடியை தொடர்ந்து சோயிப் அக்தர் சர்ச்சை கருத்து

    இந்த சாதனை நிகழ்வதற்கு முந்தைய ஓவரில் இங்கிலாந்து வீரர் பிளிண்டாப்புடன் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் கோபத்தில்தான் அடுத்து வீசப்பட்ட 6 பந்துகளில் 6 சிக்சர்களை யுவராஜ் சிங் விளாசினார். இந்த சம்பவம் நிகழ்ந்து நேற்றோடு 15 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளன. 

    இதையொட்டி, சமூகவலைதளங்களில் யுவராஜ் சிங் அடித்த 6 பந்துகளில் 6 சிக்சர்கள் நிகழ்வு வைரலானது. இந்நிலையில், யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் குழந்தையுடன் இருக்கும் விடியோவை பதிவிட்டு, 15 ஆண்டுகளுக்குப் பிறகு 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்த விடியோவை பார்ப்பதற்கு இதை விட சிறந்த பார்ட்னர் அமையவில்லை என்று பதிவிட்டுள்ளார். யுவராஜ் சிங்கின் இந்த பதிவு சமூகவலைதளத்தில் பரவலாகி வருகிறது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....