Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்அதிமுக மோதல் முடிவுக்கு வருமா? டெல்லிக்கு பறந்த ஈபிஎஸ்.. குடும்பத்தோடு கோவிலுக்கு பறந்த ஓபிஎஸ்

    அதிமுக மோதல் முடிவுக்கு வருமா? டெல்லிக்கு பறந்த ஈபிஎஸ்.. குடும்பத்தோடு கோவிலுக்கு பறந்த ஓபிஎஸ்

    பிரதமர் மோடியை சந்திப்பதற்காக எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று இரவு திடீரென டெல்லி சென்றுள்ள சம்பவம் அதிமுகவில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சத்தில் இருக்கும் நிலையில் திடீர் திருப்பமாக எடப்பாடி பழனிச்சாமி நேற்று இரவு 9 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இவருடன் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் உடன் சென்றுள்ளனர். 

    அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது தொடர்பான பொதுக்குழு தீர்மானங்களை இந்திய தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே சமர்ப்பித்துள்ள நிலையில், தற்போது அ.தி.மு.க. அலுவலக சாவி ஒப்படைப்பு மற்றும் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மீண்டும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் நேரடியாக சென்று எடுத்துக்கூறி ,அது தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யவே சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க : துணை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீங்கிய சுப்புலட்சுமி ஜெகதீசன்.. திமுகவில் பரபரப்பு!

    அதுமட்டுமின்றி அதிமுகவில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து பிரதமர் மோடி அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று எடப்பாடி அவர்கள் பிரதமர் மோடியை பலமுறை சந்திக்க முயற்சித்தும், அந்த முயற்சிகள் எல்லாம் கை கொடுக்காத நிலையில், தற்போது மீண்டும் எப்படியாவது அவரை சந்தித்து பேசிவிட வேண்டும் என்று மூன்று நாள் பயணமாக இம்முயற்சியை அவர் மேற்க்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.  

    ஒருவேளை பிரதமர் மோடியை, எடப்பாடி அவர்கள் சந்திக்க நேர்ந்தால் அதிமுகவில் தலைவர்கள் அனைவரும் மீண்டும் ஒன்று சேர்வது அல்லது எடப்பாடியின் கீழ் மொத்தமாக அதிமுகவை கொண்டு செல்வது போன்ற பல விஷயங்கள் தொடர்பாக அலோசனை நடைபெறலாம் என்று சொல்லப்படுகிறது.

    மேலும் எடப்பாடி அவர்கள், பிரதமர் மோடியை அருகில் இருந்து சந்திக்க பலமுறை வாய்ப்புகள் அமைந்தும் மோடி அதனை தவிர்த்துவிட்ட நிலையில், தற்போது டெல்லியில் இருந்தே தானாக அழைப்பு வந்த பிறகே, அவர் டெல்லி புறப்பட்டுள்ளதாக தெரிகிறது.  

    இந்த பயணத்தின் போது எடப்பாடி அவர்கள் மோடியிடம் நான்கு முக்கியமான விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. முதல் நிகழ்வாக தேர்தல் ஆணையத்தில் அதிமுகவில் தனக்கு இருக்கும் பதவி, உரிமை, பொதுக்குழு ஆகியவற்றை தேர்தல் ஆணையம் அங்கீகரிப்பது பற்றி எடப்பாடி பேச வாய்ப்பு உள்ளதாகவும், மேலும் லோக்சபா தேர்தலில் அதிமுக -பாஜக உறவு எந்த அளவில் இருக்கும், அதிமுக அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை நடத்தும் ரெய்டு ஆகியவை குறித்து விவாதிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

    இதுமட்டுமின்றி டெல்லியில் இருந்து எடப்பாடிக்கு வந்த இந்த அழைப்பு அமித்ஸாவுடனான ஆலோசனைக்கான அழைப்பு மட்டுமே தவிர, பிரதமர் மோடியை சந்திப்பதற்கான அழைப்பு அல்ல என்றும் கூறப்படுகிறது. எடப்பாடி அவர்களும் எப்படியாவது மோடியை சந்தித்து பேசி விட வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு நாளாக ஏற்பாடு செய்யப்பட்ட பயணத்தை நீட்டித்து மூன்று நாளாக மாற்றியுள்ளதாக தெரிகிறது.

    இதையும் படிங்க : நாளை கும்மிடிப்பூண்டியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சசிகலா..

    எது எப்படி இருந்தாலும் நடைபெறும் எல்லா நிகழ்வுகளும் எட்டப்படிக்கு சாதகமாகவே நடைபெற்று வரும் நிலையில், மனம் வெறுத்துப்போன ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக தனது குடும்பத்தினருடன் மதுரை மற்றும் ராமேசுவரம் சென்று வந்துள்ளார். அங்குள்ள கோவில்களில் சாமி தரிசனத்தை முடித்தவர், பிறகு மதுரையில் இருந்து சென்னை வந்து சிறிதும் நேரம் காத்திருந்து விட்டு, இங்கிருந்து மீண்டும் வாரணாசி புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு காசி விஸ்வநாதா் கோவில் உள்பட பல்வேறு கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி விட்டு மீண்டும் சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.

    தற்போது ஓபிஎஸ் – இபிஎஸ் ஆகிய இருவருடைய செயல்பாடுகளும் கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டலையே பாஸ் என்பது போல்தான் உள்ளது . 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....