Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்துணை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீங்கிய சுப்புலட்சுமி ஜெகதீசன்.. திமுகவில் பரபரப்பு!

    துணை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீங்கிய சுப்புலட்சுமி ஜெகதீசன்.. திமுகவில் பரபரப்பு!

    திமுக மேலிடம் மீதான அதிருப்தி காரணமாக சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது துணை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டிருப்பது திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட சுப்புலட்சுமி ஜெகதீசன், பாஜகவைச் சேர்ந்த சரஸ்வதியிடம் மிகக் குறைவான வாக்கு எண்ணிக்கையில் தோல்வியுற்றார். தான் தோல்வி அடைந்ததற்கு காரணமாக சிலரைச் சுட்டிக்காட்டிய சுப்புலட்சுமி, இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

    இருப்பினும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், உட்கட்சித் தேர்தலிலும் அவரது ஆதரவாளர்கள் சிலர் தோற்கடிக்கப்பட்டனர். இதுபோன்ற பிரச்சனைகளால் சுப்புலட்சுமி அதிருப்தி அடைந்து இருப்பதுடன் கட்சி நிகழ்ச்சிகளிலும் அவ்வளவாக பங்கேற்காமல் தவிர்த்தே வந்துள்ளார். 

    அதே நேரத்தில், சுப்புலட்சுமியின் கணவர் ஜெகதீசன், தனது முகநூல் பக்கத்தில் முதல்வரின் நிகழ்ச்சி குறித்து பல்வேறு பதிவுகளை சமீப காலமாக பதிவிட்டு வருகிறார்.

    இதையும் படிங்க : ‘நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்’ – ஆ.ராசா ஆவேசம்

    குறிப்பாக சொல்லப்போனால், செப்டம்பர் 11 அன்று சென்னையில் நடைபெற்ற ‘மாமனிதன் வைகோ’ என்ற ஆவணப்படத்தை முதல்வர் வெளியிட்டார். அதோடு, வைகோவையும் புகழ்ந்து பேசினார். இதனை விமர்சித்து ஜெகதீசன் பதிவை வெளியிட்டிருந்தார். 

    மேலும் அவர், 1993 ஆம் ஆண்டு கருணாநிதி ராணிப்பேட்டை சென்ற போது  வாகனத்தை தீயிட்டு கொளுத்திய சம்பவத்தை குறிப்பிட்டு, அப்போது அதிமுகவில் இருந்தவர்கள் தான் இப்போது திமுகவில் அமைச்சராக பதவியில் இருக்கிறார்கள் எனவும் குறிப்பிட்டு கடுமையான விமர்சனத்தை பதிவு செய்திருந்தார்.

    அதுமட்டுமின்றி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமணத்தை அமைச்சர் மூர்த்தி மகனின் திருமணத்துடன் ஒப்பிட்டும் ஜெகதீசன் பதிவிட்டிருந்தார். 

    இதனிடையே சுப்புலட்சுமி மீது உள்ளூர் திமுகவினரே கட்சித் தலைமையிடம் தங்களின் அதிருப்தியை தெரிவித்திருப்பதாக சொல்லப்படுகிறது. 

    இந்நிலையில், சுப்புலட்சுமி தனது துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலகியதாகவும், வயது மூப்பு காரணமாக கட்சி பணிகளில் இருந்து ஒதுங்கி இருக்க போவதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. 

    இந்நிலையில், சுப்புலட்சுமி ஜெகதீசன் துணை பொதுச் செயலாளர் பதிவியிலிருந்து விலகுவதாக  அறிக்கை வெளியிட்டிருப்பது திமுக கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    dmk

    இருப்பினும், இதுகுறித்து திமுக கட்சித் தலைமை இன்னும் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை. 

    இதையும் படிங்க : லதா ரஜினிகாந்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....