Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஸ்ரீமதி வழக்கில் சூறையாடப்பட்ட கனியாமூர் பள்ளி.. 68 நாட்களுக்கு பிறகு மீண்டும் திறப்பு

    ஸ்ரீமதி வழக்கில் சூறையாடப்பட்ட கனியாமூர் பள்ளி.. 68 நாட்களுக்கு பிறகு மீண்டும் திறப்பு

    கனியாமூர் தனியார் பள்ளி போலீஸ் பாதுகாப்புடன் 68 நாட்களுக்கு பின் இன்று திறக்கப்பட்டு மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. 

    கடந்த ஜூலை 13-ம் தேதி கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறந்து போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த உயிரிழப்புத் தொடர்பாக போராட்டத்தின் போது வன்முறை உருவானது. இந்த வன்முறையின்போது, பள்ளி பொருட்களை சேதப்படுத்தப்பட்டன. 

    இந்த கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி, தொடர்ந்து கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் கலவரத்தின் போது சிதைந்து போன பள்ளியை சீரமைப்பது தொடர்பான அனுமதியை வழங்கி மாவட்ட ஆட்சியர் ஷர்வன் குமார் ஜடாவத் உத்தரவிட்டார். 

    இதையும் படிங்க : லதா ரஜினிகாந்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

    மேலும், பள்ளியின் மறுசீரமைப்பு செய்ய 45 நாட்கள் அனுமதி வழங்கியும், பள்ளி கட்டடங்களை மறுசீரமைப்பு தவிர இதர பணிகளை மேற்கொள்வது உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டது என்று உத்தரவிட்டார். 

    இந்நிலையில், மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் கலவரத்தில் சூறையாடப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளி ,போலீஸ் பாதுகாப்புடன் 68 நாட்களுக்கு பின் இன்று திறக்கப்பட்டு மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணியில் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....