Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்வெறும் நான்கு முதல்வர்கள் மட்டும் இல்ல, அதுக்கும் மேல – எடப்பாடிக்கு பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்

    வெறும் நான்கு முதல்வர்கள் மட்டும் இல்ல, அதுக்கும் மேல – எடப்பாடிக்கு பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்

    மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில், தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஆலோசனை கூறும் அனைவரும் முதல்வர்களே என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

    மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:

    மாற்றுத்திறனாளிகள் என்ற சுயமரியாதை பெயரைச் சூட்டியவர் கலைஞர் தான். ஒரு திறன் குறைந்தாலும் இன்னொரு திறன் மூலம் ஆற்றல் மிகுந்தவர்கள் நீங்கள்(மாற்றுத்திறனாளிகள்).

    உலக வங்கி உதவியுடன் மாற்றுத்திறனாளிகள் உதவித்திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. செவித்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பி.காம்., பி.சி.ஏ. படிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

    இப்போது கொரோனா காலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஆவின் பாலகம் அமைக்க வாடகை, முன்பணம் செலுத்துவதில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

    இதையும் படிங்க : துணை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீங்கிய சுப்புலட்சுமி ஜெகதீசன்.. திமுகவில் பரபரப்பு!

    சமீபத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் 4 முதல்வர்கள் இருப்பதாக தெரிவித்திருந்தார். வெறும் 4 முதல்வர்கள் மட்டும் அல்ல, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆலோசனை கூறும் அனைவரும் முதல்வர்களே…

    திமுக ஆட்சியின் மீது அவதூறு கருத்துகளைப் பரப்ப நினைக்கிறார்கள். சொல் புத்தியும் இல்லாமல், சுயபுத்தியும் இல்லாமல் செயல்பட்ட அதிமுக ஆட்சி போல் திமுக ஆட்சி இல்லை. இனி தமிழகத்தை ஆளப்போவது திமுக ஆட்சிதான். மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களின் நம்பிக்கையை ஆட்சியர்கள் பெறுவதுதான் சாதனை.

    physically challenged people

    மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் எந்திரம் வழங்குவதற்கான வயது உச்சவரம்பு 60-ஆக அதிகரித்துள்ளது. மேலும், தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும் 235 இல்லங்களுக்கு வழங்கப்படும் உணவூட்டு மானியம் அதிகரித்துள்ளது. உணவூட்டு மானியம் ரூ. 900-ல் இருந்து ரூ. 1200 -ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....