Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்நடிகை பவுலின் ஜெசிகா தற்கொலையில் திடீர் திருப்பம்.. வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

    நடிகை பவுலின் ஜெசிகா தற்கொலையில் திடீர் திருப்பம்.. வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

    நடிகை பவுலின் ஜெசிகா தற்கொலையில் மர்மம் இருப்பதாக அவரது சகோதரர்  காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

    ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகை பவுலின் ஜெசிகா என்ற தீபா  இவருக்கு வயது 29. இவர் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு அவென்யூ பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். நடிகை ஜெசிகா பல திரைப்படங்களில் துணை நடிகையாகவும், வாய்தா திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்து பிரபலமானவர்.

    இந்நிலையில், பவுலின் ஜெசிகா கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர், எழுதியிருந்த கடிதத்தில் அவர் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரின் மரணத்திற்கு யாரும் காரணமில்லை எனவும் தெரிவித்திருந்ததாக கோயம்பேடு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

    இதையும் படிங்க: நடிகர் அஜித்குமார் படத்தின் டைட்டில் இதுவா? – இணையத்தில் வைரலாகும் ‘ஏகே 61’!

    பவுலின் ஜெசிகாவின் காதலன் என்று கூறப்படும் தயாரிப்பாளர் சிராஜுதீன் மற்றும் அவரது நண்பர் பிரபாகரன் ஆகியோர் மீது சந்தேகத்தின் பெயரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பவுலின் குடியிருந்த பகுதியிலும் சிசிடிவி காட்சிகளை சேகரித்து சோதனை நடத்தி வருகின்றனர். 

    இதனிடையே தயாரிப்பாளர் சிராஜுதீனுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருப்பதாகவும், இதனிடையே பவுலின் அவரிடம் காதலை வெளிப்படுத்தியதாகவும் அதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

    இந்நிலையில், தனது சகோதரியின் இறப்பில் மர்மம் இருப்பதாக பவுலின் நடிகையின் சகோதரர் ராஜேஷ் காவத்துறையிடம் தெரிவித்துள்ளார்.  

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....