Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்நடிகர் அஜித்குமார் படத்தின் டைட்டில் இதுவா? - இணையத்தில் வைரலாகும் 'ஏகே 61'!

    நடிகர் அஜித்குமார் படத்தின் டைட்டில் இதுவா? – இணையத்தில் வைரலாகும் ‘ஏகே 61’!

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 

    தென்னிந்திய நடிகர்களுள் மிக முக்கியமான ஒருவர், அஜித்குமார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளிவந்த வலிமை திரைப்படமானது கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆயினும் வசூலில் பெரும் வேட்டையை நிகழ்த்தியது. இந்நிலையில், வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் மீண்டும் போனி கபூர் தயாரித்து எச்.வினோத் இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

    இதையும் படிங்க: தனுஷுக்கு ஜோடியாக சிவகார்த்திகேயன் பட ஹிட் நடிகை – கேப்டன் மில்லர் அப்டேட்

    இத்திரைப்படத்திற்கு தற்காலிகமாக ஏகே-61 என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்காக அஜித்குமார் இருக்கும் தோரனை அஜித் ரசிகர்களை மட்டும் இன்றி, அனைத்து தமிழ் திரையுலக ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மும்மரமாக தற்போது நடந்துவருகிறது. 

    இந்நிலையில் ஏகே 61 திரைப்படத்திற்கு தற்போது ‘துணிவே துணை’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக தகல்கள் வெளிவந்துள்ளது. இத்தலைப்புச் சார்ந்து அதிகாரப்பூர்வமாக படக்குழு எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....