Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஆபாச வீடியோக்கள் விற்பனை செய்யும் தளமாக மாறி வரும் ட்விட்டர் - மகளிர் ஆணைய தலைவர்...

    ஆபாச வீடியோக்கள் விற்பனை செய்யும் தளமாக மாறி வரும் ட்விட்டர் – மகளிர் ஆணைய தலைவர் குற்றச்சாட்டு

    மாணவிகள் மற்றும் சிறுமிகளின் ஆபாச காணொளிகள் ட்விட்டரில் 20-30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தில்லி மகளிர் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. 

    பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழகத்தில் மாணவிகள் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இங்குள்ள மாணவிகளின் ஆபாச புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவியதாக வதந்தி பரவியது. சுமார் 60 மாணவிகளின் காணொளிகள் இணையதளத்தில் லீக் ஆனதாக கூறப்படுகிறது. 

    இதனால், ஆத்திரமடைந்த மாணவிகள் கடந்த 17 ஆம் தேதி நள்ளிரவுக்கு பின் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தியதில், அந்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவி ஒருவர் தனது ஆபாச காணொளியை இமாசல பிரதேச மாநில தலைநகர் சிம்லாவை சேர்ந்த ஒரு வாலிபருக்கு அனுப்பியிருப்பது தெரியவந்தது. 

    இதைத்தொடர்ந்து, அந்த மாணவி, வாலிபர் மற்றும் அவர்களது கூட்டாளிகள் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

    இதையும் படிங்க: உணவு வாங்கினால் முத்தம் இலவசமா? சொமாட்டோ ஊழியர் செய்த காரியம்

    இதுகுறித்து தில்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

    உலகின் மிகப்பெரிய சமூக ஊடகங்களில் ஒன்றான ட்விட்டர், குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை விற்கும் ஊடகமாக மாறியுள்ளது. இளம் பெண்களை பலாத்காரம் செய்யும் வீடியோக்கள் ட்விட்டரில் நிரம்பி வழிகின்றன. சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்கப்படுகின்றன.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....