Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஉணவு வாங்கினால் முத்தம் இலவசமா? சொமாட்டோ ஊழியர் செய்த காரியம்

    உணவு வாங்கினால் முத்தம் இலவசமா? சொமாட்டோ ஊழியர் செய்த காரியம்

    உணவு டெலிவரி செய்யும் இளைஞர் ஒருவர் உணவு டெலிவரி செய்த பின், நன்றி கூறியதற்காக, உணவு வாங்கிய இளம்பெண்ணின் கன்னத்தில் இரண்டு முறை முத்த மிட்டுள்ளார். 

    மராட்டிய மாநிலம் புனேவில் யெவலேவாடி பகுதியில் கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி 19 வயதுடைய இளம்பெண் ஒருவர் சொமாட்டோவில் உணவு ஆர்டர் செய்துள்ளார். 

    ஆர்டர் செய்த உணவை கொடுக்க வந்த ரயீஸ் ஷேக் என்ற 40 வயது மதிக்கத் தக்க டெலிவெரி ஊழியர், உணவை அந்தப் பெண்ணிடம் கொடுக்க, அதை பெற்றுக்கொண்ட அப்பெண் பதிலுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நன்றி சொன்ன பெண்ணை அருகில் வலுக்கட்டாயமாக இழுத்த அந்த ஊழியர் இரண்டு முறை அப்பெண்ணின் கன்னத்தில் முத்தம் கொடுத்துள்ளார்.

    இதனையடுத்து மேலும் அந்த சிறுமியிடம் தண்ணீர் கேட்க, பயந்துபோன அந்த இளம்பெண் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்துள்ளார். தண்ணீரை வாங்கி குடித்து விட்டு, அந்த பெண்ணை இன்னும் அருகில் இழுத்து சில சில்மிஷ வேலைகளை செய்து துன்புறுத்தவும் செய்துள்ளார்.

    இதையும் படிங்க: கலைக்கட்டும் ‘தசரா திருவிழா’ – சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

    பிறகு அந்த டெலிவரி ஊழியர், தான் மாமாவை போன்றவர் என்றும் ஏதாவது வேண்டுமென்றால் தன்னிடம் கேட்குமாறும் கூறியுள்ளார். 

    தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர், மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் கேட்டு அந்த பெண்ணை தொந்தரவு செய்ய, உடனே அந்த இளம் பெண் உதவி கேட்டு சத்தம் போட்டுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வர, அப்போது தப்பிக்க முயன்ற ரயீஸ் ஷேக் என்ற அந்த நபரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

    குற்றம் சாட்டப்பட்ட அந்த ரயீஸ் ஷேக் மீது ஐபிசி 354 மற்றும் 354 ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....