Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுநாளை ஆயிரம் சிறப்பு காய்ச்சல் முகாம்களுக்கு ஏற்பாடு - மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

    நாளை ஆயிரம் சிறப்பு காய்ச்சல் முகாம்களுக்கு ஏற்பாடு – மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

    தமிழகம் முழுவது பரவிவரும் H1N1 என்ற ஃபுளு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்காக  தமிழக அரசு ஏற்கனவே பல முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் நாளை 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    சென்னையில் டிஎம்எஸ் வளாகத்தில் அமைந்துள்ள சுகாதாரத்துறை அலுவலகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களின் தலைமையில் இருதய நோய் வல்லுனர்களுடான ஆய்வு கூட்டம்  இன்று நடைபெற்றது. 

    இந்த ஆய்வு கூட்டத்தில் இருதய நோய் மருத்துவர்கள் மற்றும் வல்லுனர்கள் கலந்துகொண்டனர். அப்போது முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 1,19,10,653 பயனாளிகள் 10,835 கோடி ரூபாய் காப்பீட்டு தொகையின் மூலம் பயனடைந்துள்ளவர்களின் விவரங்களை அமைச்சர் கேட்டு தெரிந்து கொண்டதோடு, கூட்டம் முடிந்து பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். 

    இதையும் படிங்க: தமிழகத்திலும் வேகமெடுக்கும் ஃப்ளூ காய்ச்சல்.. பள்ளிகளுக்கு விடுமுறை உண்டா? அமைச்சர் விளக்கம்

    அந்த சந்திப்பில் தமிழ்நாடு முழுவதும் பரவி வரும் H1N1 எனப்படும் இன்புளுயன்ஸா காய்ச்சல் தொற்றால் ஜனவரி மாதத்தில் இருந்து தற்போதுவரை 1166 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 371 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

    மேலும், இதில் 15 நபர்கள் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், மீதம் உள்ளவர்கள் தனியார் மருத்துவமனை மற்றும் வீடுகளில் இருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், கடந்த 10 மாதங்களில் மட்டும் 10 நபர்கள் இந்த நோயால் மட்டுமே இறந்துள்ளதாகவும்  கூறினார். 

    அதுமட்டுமின்றி தமிழகம்  முழுவதும் இதற்காக 11,333 இடங்களில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மருத்துவம் பார்த்தும், மருந்துகள் வழங்கியும் வருவதாக தெரிவித்த மா.சுப்பிரமணியன் அவர்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக நாளை தமிழ்நாடு முழுவதும் 1000 சிறப்பு காய்ச்சல் முகாம்களை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாகவும், அதில் சென்னையில் மட்டும் 100 இடங்களில் இந்த காய்ச்சல் முகாம் நடைபெறும் என்றும் கூறினார்.

    சளி மற்றும் காய்ச்சலால் சிரமப்படுபவர்கள் நேராக இந்த முகாம்களுக்கு சென்று இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம். கொரோனா முடிவுக்கு வந்து விட்டது என்று அலட்சியமாக இருக்க வேண்டாம். அதே நேரத்தில் தமிழகத்தில் கட்டுக்குள் உள்ளது, பயப்பட வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....