Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஜாக்குவாரில் வந்த கொள்ளையர்கள்; திருடிய பணத்தில் ஏழைகளுக்கு நன்கொடை?

    ஜாக்குவாரில் வந்த கொள்ளையர்கள்; திருடிய பணத்தில் ஏழைகளுக்கு நன்கொடை?

    உத்தரபிரதேசத்தில் ஜாக்குவார் காரில் 80 ஆயிரம் ரூபாய்க்கு எரிபொருள் நிரப்பிக்கொண்டு கொள்ளையடிப்பதற்காக சென்னை வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். 

    உத்தர பிரதேசத்தில் இருந்து ஜாகுவார் காரில் 80 ஆயிரம் ரூபாய்க்கு எரிபொருளை நிரப்பிக்கொண்டு கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் கொள்ளையர்கள் சென்னை வந்தனர். 

    சென்னை வந்த கொள்ளையர்கள் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி ஒரு வீட்டுக்குள் நுழைந்தனர். அப்போது காவலாளி கூச்சலிட்டதால் அங்கிருந்து அவர்கள் தப்பியுள்ளனர். இதையடுத்து, ஈசிஆர் சாலையில் இருக்கும் ஒரு வீட்டில் ரூபாய் 1000 மற்றும் 2 ஜோடி செருப்புகளை கொள்ளையடித்தனர். 

    இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் சுல்தான் காவல்துறையிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து, காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கார் எண்ணைக் கண்டறிந்து விசாரணை மேற்கொண்டனர். 

    அப்போது உத்தரப் பிரதேசத்தில் இருந்து வந்த கொள்ளையர்கள் புனித் குமார் மற்றும் ராஜேஷ்குமார் யாதவ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தில் தலைவனாக செயல்பட்ட இர்பான் மற்றும் சுனில் குமார் யாதவை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

    இர்பான் மனைவி பஞ்சாயத்து தலைவராக இருப்பதாகவும், இதன் மூலம் இர்பான் கொள்ளையடித்து சென்ற பொருள்களை கிராமத்தில் இருக்கும் ஏழைகளுக்கு அளித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. 

    மேலும் பள்ளிக் குழந்தைகளுக்கு கட்டணம் செலுத்துவது, கண் சிகிச்சைக்கு நன்கொடை கொடுப்பது போன்றவற்றை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இர்பான் நாடு முழுவதும் பல்வேறு கொள்ளை வழக்குகளில் ஈடுபட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.  

    தந்தை வரைந்த ஓவியம்; மகனுக்கு கிடைத்த புதையல் – போலந்தில் ஆச்சரியம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....