Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்தந்தை வரைந்த ஓவியம்; மகனுக்கு கிடைத்த புதையல் - போலந்தில் ஆச்சரியம்!

    தந்தை வரைந்த ஓவியம்; மகனுக்கு கிடைத்த புதையல் – போலந்தில் ஆச்சரியம்!

    இரண்டாம் உலகப்போர் நடந்துக்கொண்டிருந்த நேரம். போலாந்து நாட்டைக் கைப்பற்ற சோவியத் யூனியன் படைகள் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருந்தன. 

    இதை அறிந்த போலந்து வாசிகள் பலர் போலந்தை விட்டு வெளியேறினர். அப்படியாக, கிழக்குப் போலந்தில் இருந்த ஆடம் கிஸாஸ்கி தனது நான்கு மகன்களையும் போலந்தை விட்டு வெளியேறும்படி செய்தார். அவர்கள் வெளியேறும்போது வீட்டில் இருந்த நகை உட்பட பல பொருட்களை யாருக்கும் தெரியாமல் வீட்டினுள்ளே புதைத்து விட்டு சென்றனர். 

    கால ஓட்டத்தில் போலந்தை விட்டு சென்ற நான்கு சகோதரர்களும் வெவ்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்து தங்கள் வாழ்வைத் தொடர்ந்தனர். இவர்களுக்கு குழந்தைகள் பிறந்தனர். அவர்களும் தங்கள் வாழ்வை அந்தந்த நாடுகளில் கழித்து வந்தனர். 

    இந்நிலையில், ஆடமின் கிஸாஸ்கியின் பேரன் ஜேன் போலந்திற்கு வந்தார். அவர் வரும்போது தன்னுடன் தன் அப்பா, அதாவது  ஆடமின் கிஸாஸ்கியின் மகன் கஸ்டாவ் வரைந்திருந்த ஒரு படத்தின் புகைப்படத்தை கொண்டு வந்துள்ளார். அப்புகைப்படத்தில் வெள்ளிப்புதையல் வீட்டில் இருப்பதாக கஸ்டாவ் வரைந்து வைத்திருந்தார். 

    இதைக் கண்டறிய வந்த ஜேன் தேடலை தொடங்கினார். ஆனால், அந்த தேடல் புதையலிருக்கும் இடத்தை அடைய உதவவில்லை. அப்போதுதான், உள்ளூரில் பள்ளி முதல்வராக இருந்து ஓய்வு பெற்ற 92 வயது முதியவர் ஜேன்-னுக்கு உதவ, 3 நாட்கள் தேடி அவர்கள் புதையலை கண்டறிந்தனர். 

    இந்த புதையலில், நிறைய வெள்ளி பொருட்கள், சிறிய பால் குடுவை, தங்க சிலுவை பதிக்கப்பட்ட செயின், வேட்டையாடும் துப்பாக்கிகள் உட்பட பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது குறித்து ஜேன் கூறுகையில், இது வெறுமனே பொருட்களுக்கான புதையல் அல்ல, இது ஒரு குடும்ப பொக்கிஷம் என்று கூறினார். 

    தேசிய கீதத்தை அவமதித்தார முதன்மை கல்வி அலுவலர்; உருவான சர்ச்சை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....