Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமர்ம விலங்கு தாக்கி 73 ஆடுகள் உயிரிழப்பு; நாய்கள் காரணமா?

    மர்ம விலங்கு தாக்கி 73 ஆடுகள் உயிரிழப்பு; நாய்கள் காரணமா?

    திருச்சியில் மர்ம விலங்கு தாக்கி 73 ஆடுகள் உயிரிழந்த சம்பவத்தில் வனத்துறையினர் பொருத்தி இருந்த கேமராவில் நாய்கள் வருவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது. 

    திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் கொடும்பப்பட்டி ஊராட்சி சின்னஅருளப்பட்டியில் வசிப்பவர் கருப்பன் (57). இவர் ஆடுகளை வளர்த்து வருவதையே தனது பிரதான தொழிலாக வைத்து உள்ளார். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 50 க்கும் மேற்பட்ட ஆடுகளை மர்ம விலங்கு தாக்கி கொன்று சென்றது. 

    இந்நிலையில், இவர் ஆடுகளை தனது சகோதரர் பழனியாண்டியின் பட்டியில் கடந்த 14 ஆம் தேதி இரவு அடைத்துள்ளார். அப்போது பட்டியில் 70 ஆடுகள் இருந்த நிலையில், மறுநாள் காலையில் சென்று பார்த்தபோது, அங்கு 23 ஆடுகளை பட்டியில் புகுந்த மர்ம விலங்கு கடித்து கொன்று சென்றது தெரியவந்தது. 

    இதைத்தொடர்ந்து, கருப்பன் வருவாய்த்துறை மற்றும் வனத்துறைக்கு தகவல் கொடுத்ததன் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. இருப்பினும் கால்நடை மருத்துவர்கள் உடல்கூராய்வு செய்து அளித்ததை தவிர கருப்பனுக்கு எந்த இழப்பீட்டு நடவடிக்கைகளும் போதுமான ஆலோசனைகளும்  வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

    இந்நிலையில், மர்ம விலங்கு குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, வனச்சரகர் மகேஸ்வரன் உத்தரவின் பேரில் அப்பகுதியில் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டது. அதில் கடந்த 4 நாட்களாக ஆடுகள் அடைக்கப்பட்டிருந்த பட்டிக்கு அருகில் வெறிநாய்கள் சுற்றித்திறந்தது பதிவாகி இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

    சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்த நடனக் கலைஞர் குழு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....